News May 3, 2024
அமேதியில் போட்டியிடும் கே.எல்.சர்மா யார்?

அமேதியில் காங்., வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கே.எல் சர்மா நேரு குடும்பத்தின் நம்பிக்கைக்குரியவராக கடந்த 40 ஆண்டுகளாக இருந்து வருகிறார். 1983இல் கட்சியில் இணைந்த அவர் ராஜிவ் காந்தியுடன் நட்பை ஏற்படுத்திக்கொண்டார். 1991இல் ராஜிவ் மரணத்துக்கு பிறகு, அமேதி தொகுதி பொறுப்பாளரான அவர், 1999இல் அங்கு சோனியா வெற்றி பெற காரணமாக இருந்தார். இத்தனை வருட விசுவாசத்துக்கு அவருக்கு அமேதியை காங்., வழங்கியுள்ளது.
Similar News
News February 1, 2026
பழைய ₹5 நோட்டுக்கு ₹10 லட்சம்! அடுத்த நூதன மோசடி

மோசடிகள் பலவிதம், அதில் இது புதுரகம். ‘பழைய ₹5 நோட்டு உள்ளதா? ₹10 லட்சம் கிடைக்கும்’ என ரீல்ஸ் ஒன்று வைரலாகியுள்ளது. அந்த நோட்டை வைத்திருந்த நெல்லை விவசாயி, ரீல்ஸில் இருந்த நம்பருக்கு போன் செய்துள்ளார். மறுமுனையில் இருந்தவர், ₹10 லட்சத்துக்கு, வரியாக ₹30 ஆயிரம் வேண்டும் என வங்கி அக்கவுண்ட் நம்பரை கொடுக்கிறார். ஆசையில், பணத்தை அனுப்பிய பிறகே, ஏமாந்ததை உணர்ந்த விவசாயி தற்போது தவித்து நிற்கிறார்.
News February 1, 2026
தைப்பூச வாழ்த்து சொன்ன தவெக தலைவர் விஜய்!

தவெக தலைவர் விஜய் தைப்பூசம் வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘தமிழ்க் கடவுள் முருகப் பெருமானைப் போற்றி வணங்கும், உலகெங்கும் வாழும் தமிழ்ச் சொந்தங்கள் அனைவர் இல்லங்களிலும் வளம், மகிழ்ச்சி, வெற்றி ஆகியவை நிலைக்கட்டும் என்று குறிப்பிட்டு, இனிய தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார். முன்னதாக, விநாயகர் சதுர்த்திக்கு விஜய் வாழ்த்தவில்லை என விமர்சனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
News February 1, 2026
தமிழக தேர்தல் தேதி.. வெளியான முக்கிய தகவல்

மார்ச் மாதத்தில் தமிழக தேர்தல் தேதி வெளியாகும் என ECI வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிப்.15-க்கு பிறகு தமிழகம், புதுச்சேரி, கேரளா, மே.வங்கம் மாநிலங்களுக்குச் செல்லும் ECI அதிகாரிகள், தேர்தல் பணி நிலவரங்களை ஆய்வு செய்வர். மேலும் ஏப்ரல் 3-ம் வாரத்தில் தேர்தல் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. இதையொட்டி தேர்தல் பணிகளில் ஈடுபடும் IAS, IPS அதிகாரிகளை ECI ஆலோசனைக்கு அழைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


