News January 4, 2026

செங்கல்பட்டு: மகனை கல்லை போட்டு கொன்ற தந்தை!

image

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தில் சிவனேசன் (32), வாலிபர் மர்மச்சாவில் திடீர் திருப்பமாக கல்லால் தந்தையே மகனை கொன்று விட்டு நாடகமாடியது தெரியவந்துள்ளது. தினமும் சேமித்து வைத்து இருந்த பணத்தில் மது குடித்து விட்டு வரும் சிவனேசன் தந்தை மற்றும் தாயிடம் தகராறி ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ஆத்திரத்தில் தந்தையே கிரைண்டர் கல்லை போட்டு மகனை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Similar News

News January 14, 2026

செங்கல்பட்டு: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

image

செங்கல்பட்டு மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே க்ளிக் செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News January 14, 2026

செங்கை: தொழிலாளி துடிதுடித்து பலி!

image

ஈச்சங்காட்டில் மேற்கு வங்கத்தை சேர்ந்த அமைமச்ஹி (35) கட்டிட தொழிலாளி. அந்த பகுதியிலேயே தங்கி வேலை பார்த்து வருகிறார். தனக்கு சொந்தமான டூவீலரில் ஈச்சங்காட்டிலிருந்து காயார் நோக்கி சென்ற போது நிலைத்தடுமாறி சாலையோர சுவரில் மோதி படுகாயமடைந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

News January 14, 2026

செங்கல்பட்டு: வாகன விபத்தில் 2 மான்கள் பலி!

image

அச்சரப்பாக்கம் அருகே வஜ்ரகிரி மலை அடிவாரத்தில் உள்ள சமூக காட்டில் இருந்து சென்னை – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை கடந்த, இரண்டு வயது மதிப்புள்ள ஆண் மற்றும் பெண் புள்ளிமான்கள் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், அச்சிறுப்பாக்கம் வனத்துறையினர் மான்களின் உடலை கைப்பற்றி, காப்பு காட்டில் புதைத்தனர்.

error: Content is protected !!