News May 3, 2024
டார்ச் வெளிச்சப் பிரசவத்தினால் தாய், சேய் பலி

மும்பையில் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் கர்ப்பிணிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதில், தாயும் சேயும் உயிரிழந்தனர். மின்வெட்டு ஏற்பட்டு 3 மணி நேரமாகியும் அரசு மருத்துவமனையில் ஜெனரேட்டர் இயக்கப்படவில்லை என உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இரண்டு உயிர்கள் பறிபோன நிலையிலும், அதனை பொருட்படுத்தாது மருத்துவர்கள் மற்றொரு பிரசவத்தை இருட்டில் மேற்கொண்டதாகக் கூறினர்.
Similar News
News February 8, 2026
அதிமுகவில் இணைந்தனர்.. செந்தில் பாலாஜிக்கு அதிர்ச்சி

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சிலர் கட்சி மாறும் காட்சிகள் அதிகரித்துள்ளன. கரூரில் செந்தில் பாலாஜி, விஜயபாஸ்கர் இடையே இவ்விவகாரத்தில் கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், கடந்த 6-ம் தேதி அதிமுகவில் இருந்து விலகி பலர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். அவர்களில் சிலர் மீண்டும் இன்று விஜயபாஸ்கர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தது செந்தில்பாலாஜிக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
News February 8, 2026
சசிகலாவால் 5 முனைப் போட்டியா?

திமுக+, அதிமுக+, நாதக, தவெக என 4 முனைப் போட்டி நிலவும் நிலையில், சசிகலாவும் தனித்து போட்டியிடுவது குறித்து, தனது ஆதரவாளர்களிடம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தனித்து போட்டியிட்டால் தமிழக அரசியலில் ஏற்படும் தாக்கம் குறித்தும் கேட்கிறாராம். அமமுகவிலிருந்து விலகி சமீபத்தில் சசிகலாவுடன் இணைந்த ஜீவிதா நாச்சியாரிடம் தேர்தலில் போட்டியிடுவீர்களா என அவர் கேட்டதாகவும் கூறப்படுகிறது.
News February 8, 2026
தங்கம், வெள்ளி விலை.. ஒரேயடியாக ₹40,000 குறைந்தது

கடந்த வாரத்தில் தங்கம், வெள்ளி விலை ஏற்ற இறக்கங்களுடன் பூச்சாண்டி காண்பித்தது. தங்கம் விலை சவரனுக்கு ₹11,400 வரை குறைந்த அதேநேரத்தில் ₹3,840 உயர்ந்தது. அதேபோல், வெள்ளி விலையும் 1 கிலோவுக்கு ₹40,000 வரை குறைந்த நிலையில், ₹5,000 உயர்ந்தது. தற்போதைய நிலவரப்படி, 1 சவரன் தங்கம் ₹1,15,360-க்கும், 1 கிலோ வெள்ளி ₹2.85 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.


