News January 4, 2026
அறிவித்தார் திருப்பூர் கலெக்டர்

திருப்பூர் மாவட்ட கலெக்டர் விடுத்துள்ள அறிக்கையில் 2026-ம் ஆண்டிற்கான திருநங்கையர் முன்மாதிரி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவித்துள்ளார். சுய முயற்சியால் முன்னேறி, குறைந்தபட்சம் 5 திருநங்கைகளின் வாழ்வாதாரத்திற்கு உதவியவர்கள் இதற்குத் தகுதியானவர்கள். ஆர்வமுள்ளவர்கள் பிப்ரவரி 2-ம் தேதிக்குள் awards.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Similar News
News January 30, 2026
திருப்பூர்: 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <
News January 30, 2026
காங்கயத்தில் வங்கதேசத்தினர் 5 பேர் கைது

காங்கயத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த 5 பேரைப்பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் வங்கதேசத்தைச் சேர்ந்த ஆசன் ஹபீப் ( 22), முகமதுகம்ரூல் காசி (57). ரபீக் காசி (46), அப்சர் இஸ்லாம் (47), சோனி ஷேக் (42) ஆகிய 5 பேர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, வெளிநாட்டவர் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களைக் கைது செய்தனர்.
News January 30, 2026
அறிவித்தார் திருப்பூர் கலெக்டர்!

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக விவசாயிகள் குறைதீர்க் கூட்டம் நடத்தப்படாத நிலையில் இன்று 30ஆம் தேதி திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் மனிஷ் தலைமையில் காலை 10:30 மணியளவில் விவசாயிகள் குறைதீர்க் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


