News January 4, 2026

கிருஷ்ணகிரியில் இளைஞர் துடிதுடித்து பலி!

image

அஞ்செட்டி அருகே உள்ள பாலதுண்டன பள்ளி கிராமத்தில் இருந்து விக்னேஷ் என்பவர் நேற்று (ஜன-3) காலை 7 மணி அளவில் தனது பெற்றோருடன் இரு சக்கர வாகனத்தில் தேன்கனிகோட்டைக்கு வந்து கொண்டு இருந்தார். அப்போது, குந்துகோட்டை அருகே எதிரே அதிவேகமாக வந்த வாகனம் இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் விக்னேஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Similar News

News January 31, 2026

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி காவலர் விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இரவு 10 மணி முதல் நாளை (ஜன -31) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 31, 2026

பிப்.2, 3-இல் ‘தாயுமானவர்’ திட்ட பொருட்கள் விநியோகம்

image

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குக் குடும்பப் பொருட்கள் வழங்கப்பட உள்ளன. பயனாளிகளின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று இப்பொருட்கள் விநியோகிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ச. தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

News January 31, 2026

கிருஷ்ணகிரி அருகே பெண் மர்ம மரணம்!

image

ஊத்தங்கரையை அடுத்த சென்னப்ப நாயக்கனூா் பகுதியைச் சோ்ந்தவா் குப்புசாமி (60), ராணி (52) தம்பதி. இருவரும் கட்டுமான பணி செய்து வரும் நிலையில், குடிப்பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இருவரும் மது அருந்தி நிலையில், நேற்று குப்புசாமி எழுந்து பார்த்த போது ராணி ரத்தக் காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் கணவா் குப்புசாமியிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!