News January 4, 2026
‘அரசன்’ கதை இதுதானா?

‘அரசன்’ படம் ‘வடசென்னை’ யுனிவர்ஸில் வருவதை அப்படத்தின் தயாரிப்பாளர் தாணு உறுதி செய்துள்ளார். ‘வடசென்னை’ படத்தில் தனுஷ் சிறையில் இருக்கும் காலத்தில் நடக்கும் கதை எனவும், இப்படத்தில் தனுஷ் நடிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், படத்தில் விஜய் சேதுபதி வரும் காட்சிகள் மிரட்டலாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 22, 2026
பேரவையில் அமளி… அதிமுக வெளிநடப்பு!

விவசாயிகள் பிரச்னை குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி EPS தலைமையிலான அதிமுகவினர் வெளிநடப்பு செய்துள்ளனர். விவசாயிகள் பிரச்னை குறித்து ஜீரோ நேரத்தில் பேச அனுமதி தரும்படி EPS கோரினார். ஆனால் நாளை இதுகுறித்து பேசலாம் எனக்கூறி சபாநாயகர் அனுமதி மறுத்தார். இதனால் ஆவேசமான அதிமுக MLA-க்கள் அமளியில் ஈடுபட்டதுடன், பேரவையில் இருந்து வெளியேறி திமுக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
News January 22, 2026
கரூர் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது: SC

கரூரில் 41 பேர் பலியான சம்பவம் துரதிர்ஷ்டவசமானது எனவும், இதில் தலையிட்டு எந்த கருத்தும் கூற விரும்பவில்லை என்றும் SC தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் அரசியல் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க வேண்டும் என தொடரப்பட்ட மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக SC உத்தரவின்பேரில் CBI விசாரணை நடத்தி வருவது கவனிக்கத்தக்கது.
News January 22, 2026
தமிழக அரசு தோல்வி கண்டுவிட்டது: EPS

பிரதமர் தலைமையில் நாளை நடைபெறும் கூட்டம் தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என EPS நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பொதுமக்கள், பெண்கள் என யாருக்கும் பாதுகாப்பில்லை என சாடிய அவர், எல்லாதுறைகளிலும் திமுக அரசு தோல்வி கண்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். இதுவரை இல்லாத வளர்ச்சியை தேர்தல் வெற்றிக்கு பின் தமிழ்நாட்டுக்கு அதிமுக வழங்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


