News January 4, 2026
இரவு நேர ரோந்து பணி குறித்து மாவட்ட காவல்துறை அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் (ஜனவரி 3) இரவு முதல் (ஜனவரி 4) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
Similar News
News January 14, 2026
ஆட்சியருக்கு மண்பானை வழங்கிய விசிக பெண் நிர்வாகி

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்தை, நேற்று விசிக மாநில மகளிர் அணி செயலாளர் வேல்.பழனியம்மாள் சந்தித்தார். அப்போது, ஆட்சியரிடம் விசிக-வின் அங்கீகரிக்கப்பட்ட சின்னமான பானை மற்றும் பனை வெல்லம் கொடுத்து பொங்கல் வாழ்த்தை தெரிவித்தார். இந்த நிகழ்வில் விசிக முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
News January 14, 2026
கள்ளக்குறிச்சி: மாமியாரால் தூக்கில் தொங்கிய மருமகள்!

கள்ளக்குறிச்சி: தச்சூரைச் சேர்ந்தவர் வசந்தகுமார் மனைவி சரண்யா (32). திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். வசந்தகுமார் சென்னையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், வீட்டு வேலை சரியாக செய்யவில்லை என மருமகள் சரண்யாவை மாமியார் தேவி நேற்று முன்தினம் திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த சரண்யா வீட்டில் மின் விசிறியில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 14, 2026
மாவட்ட ஆட்சியரிடம் பரிசு பெற்ற ஆசிரியர்கள்!

கள்ளக்குறிச்சி: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் போட்டியில், உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர்கள் ராஜவேல், கந்தசாமி ஆகியோர் வெற்றி பெற்றனர். அதைத்தொடர்ந்து, அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்.


