News May 3, 2024
புதுச்சேரியில் 5000 மாணவர்கள் நீட் தேர்வு எழுத உள்ளனர்

நாடு முழுவதும் வரும் 5ம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் புதுச்சேரியில் 11 மையங்களில் நடக்கும் நீட் தேர்வினை 5 ஆயிரம் மாணவர்கள் எழுத உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்தாண்டு புதுச்சேரி தேர்வு மைய நடைமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்தந்த மாநில மாணவர்கள் அந்தந்த மாநிலங்களில் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News August 27, 2025
புதுச்சேரி: 121 கிலோ மெகா சைஸ் லட்டு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதுச்சேரி 45 அடி சாலையில் உள்ள ஜெயின் ஸ்வீட்ஸ் என்ற கடையில் 12வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி இன்று விழா கொண்டாடப்பட்டது. இதனை ஒட்டி வித்தியாசமான முறையில் 121 கிலோவில் மெகா சைஸ் லட்டு செய்து விநாயகரை வழிபட்டனர். இந்த மெகா லட்டுவை வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.
News August 27, 2025
புதுச்சேரியில் மதுபான கடைகளை மூட உத்தரவு

விநாயகா் சிலைகளைக் கடலில் கரைக்கும் ஊா்வலம் நடைபெறும் பகுதிகளில் உள்ள அனைத்து மதுபான கடைகளும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி மூட வேண்டும் என்று புதுச்சேரி கலால்துறை துணை ஆணையா் அலுவலகம் நேற்று உத்தரவிட்டுள்ளது. ஊா்வலத்தில் கலந்து கொள்ளும் பொதுமக்களின் நலன்கருதி இத்தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இந்த ஊா்வலம் காமராஜா் சாலை, நேரு வீதி, மகாத்மா காந்தி எஸ்.வி.பட்டேல் சாலை,வழியாக கடற்கரை சாலைக்குச் செல்கிறது.
News August 27, 2025
புதுச்சேரி: தேர்வு இல்லாமல் ரயில்வேயில் வேலை

புதுச்சேரி மக்களே.. இந்திய தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 3,518 அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு தேர்வு இல்லாமல் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு 10th, 12th மற்றும் ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் <