News May 3, 2024
ஆபரணத் தங்கம் ரூ.800 குறைந்தது

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.800 குறைந்ததால் மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.52,920க்கும், கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.6,615க்கும் விற்பனையாகிறது. அதேநேரம், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி, கிராம் ரூ.87க்கும், கிலோ ரூ.87,000க்கும் விற்பனையாகிறது.
Similar News
News August 30, 2025
ராசி பலன்கள் (30.08.2025)

➤ மேஷம் – பொறுமை ➤ ரிஷபம் – ஆக்கம் ➤ மிதுனம் – ஆதாயம் ➤ கடகம் – நலம் ➤ சிம்மம் – பக்தி ➤ கன்னி – தாமதம் ➤ துலாம் – போட்டி ➤ விருச்சிகம் – வாழ்வு ➤ தனுசு – மகிழ்ச்சி ➤ மகரம் – வெற்றி ➤ கும்பம் – பயம் ➤ மீனம் – ஏமாற்றம்.
News August 30, 2025
RECORD: 4 பந்துகளில் 4 விக்கெட்

துலீப் டிராபி தொடரில் North Zone அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் நபி சாதனை படைத்துள்ளார். East Zone-க்கு எதிரான ஆட்டத்தில், 53-வது ஓவரை வீசிய நபி, கடைசி 3 பந்துகளில் 3 விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்து அவர் வீசிய ஓவரின் முதல் பந்திலேயே ஒரு விக்கெட்டை எடுத்தார். இதன்மூலம், துலீப் டிராபியில் 4 பந்துகளில் 4 விக்கெட்களை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். இது அவரது அறிமுக போட்டியாகும்.
News August 29, 2025
டிசம்பரில் இந்தியா வருகிறார் புடின்!

ரஷ்ய அதிபர் புடின், வரும் டிசம்பர் மாதம் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தொடங்கவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில்(SCO), இந்தியப் பயணம் குறித்து PM மோடியுடன் புடின் ஆலோசிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்கியதால், இந்திய பொருள்களுக்கு டிரம்ப் 50% வரிவிதித்த நிலையில், புடினின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.