News January 4, 2026
புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
Similar News
News January 11, 2026
புதுக்கோட்டை: மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அடுத்த நார்த்தாலையை சேர்ந்தவர் நாகேஷ் (55). இவர் நேற்று நார்த்தாமலை சமத்துவபுரம் சாலையில் நடந்து சென்ற போது திடீரென்று மயங்கி கீழே விழுந்தார். இதனை அடுத்து அருகில் உள்ளவர்கள் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் சுகுமார் அளித்த புகாரில் கீரனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 11, 2026
புதுகை: தொலைந்த CERTIFICATE-ஐ மீட்க எளிய வழி!

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதற்கு<
News January 11, 2026
புதுகை: நான்கு மீனவர்கள் மாயம்; தேடும் பணி தீவிரம்

மணமேல்குடி அருகே பொன்நகரம் கடற்கரை கிராமத்தில் இருந்து திருமூர்த்தி என்பவருக்கு சொந்தமான நாட்டு படகில் நேற்று (ஜன.10) திருமூர்த்தி, மணிகண்டன் விநாயகம், மணிகண்டன் என நான்கு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். இந்நிலையில் இதுவரை கரை திரும்பாததால் அவர்களை தேடும் பணியில் கடலோர காவல் படையினர் மற்றும் சக மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


