News January 3, 2026

டிகிரி மட்டும் போதாது.. இதையும் படிக்க வையுங்க..

image

முன்பெல்லாம் டிகிரி முடித்தாலே வேலை என்ற காலகட்டம் மாறி, தற்போது வேலை கிடைப்பதே கடினம் என்ற நிலை வந்துவிட்டது. இதனால் குழந்தைகளை எதை படிக்க வைப்பது என நீங்கள் குழம்ப வேண்டாம். உங்கள் குழந்தைகள் டிகிரி முடிப்பதோடு, AI சார்ந்த படிப்புகள், டிஜிட்டல் மார்க்கெட்டிங், Data Science, அடிப்படை கோடிங், Interior Design, சட்டம் என இதில் ஏதாவது ஒன்று கற்பது அவசியம் என கல்வியாளர்கள் சொல்கின்றனர். SHARE.

Similar News

News January 31, 2026

விண்வெளியில் AI டேட்டா செண்டர்: SpaceX

image

விண்வெளியை உலகின் மிகப்பெரிய AI டேட்டா செண்டராக மாற்ற SpaceX தயாராகி வருகிறது. சுமார் ஒரு மில்லியன் செயற்கைக்கோள்களை விண்வெளியில் நிலைநிறுத்தி, சூரிய சக்தி & லேசர் தொழில்நுட்பத்தின் மூலம் இயங்கும் இந்த அமைப்பு, AI & டேட்டா செயலாக்கத்திற்கு தேவையான ஆற்றலை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த அமைப்பு ஸ்டார்லிங்க் நெட்வொர்க்குடன் இணைந்து அதிவேக டேட்டா பரிமாற்றத்தை சாத்தியமாக்கும்.

News January 31, 2026

வெள்ளி விலை ஒரே நாளில் ₹85,000 குறைந்தது

image

<<19009659>>தங்கம் <<>>விலையை போல், வெள்ளி விலையும் பெரியளவில் குறைந்து வருகிறது. வெள்ளி விலை இன்று காலை கிராமுக்கு ₹55, கிலோவுக்கு ₹55,000 குறைந்தது. இதனால், மாலையில் விலை உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சர்வதேச சந்தை எதிரொலியால் தற்போது கிராமுக்கு மேலும் ₹30 குறைந்துள்ளது. இன்று மட்டும் வெள்ளி விலை கிலோவுக்கு ₹85,000 குறைந்ததால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News January 31, 2026

மாற்றி மாற்றி பேசி மாட்டிய விஜய்

image

Ex.CM கருணாநிதி, MGR, ஜெயலலிதாவை தனது ரோல் மாடலாக கருதுவதாக விஜய் கூறியிருப்பது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. ஊழலுக்கு எதிரான அரசியலை செய்வதாக கூறும் விஜய், ஊழல் குற்றச்சாட்டுகளை சுமப்பவர்களையே ரோல் மாடல் என கூறியிருப்பதால் பலரும் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர். இதன்மூலம், அரசியல் புரிதல் இல்லை என்பதை விஜய் நிரூபித்துவிட்டார் எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். உங்கள் கருத்து?

error: Content is protected !!