News January 3, 2026

ஈரோடு: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு?

image

ஈரோடு மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <>Tamil Nilam<<>> என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற இடத்தை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE IT

Similar News

News January 14, 2026

பவானி அருகே விபத்தில் சிக்கியவர் உயிரிழப்பு

image

பவானி பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (66). இவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு சாலை விபத்தில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்ற முன்தினம் வீட்டில் இருந்தபோது திடீரென மயங்கி கிடந்தார். மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News January 14, 2026

அந்தியூரில் சேவல் சூதாட்டம்: 4 பேர் கைது

image

அந்தியூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சுகந்தி தலைமையிலான காவல்துறையினர் பெருமாபாளையம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக விமல், இளவரசன், கணேசன், கதிரேசன் ஆகிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து சூதாட்டத்துக்கு பயன்படுத்திய 2 சேவல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

News January 14, 2026

நஞ்சை ஊத்துக்குளி: மயங்கி விழுந்தவர் பலி

image

கொடுமுடியைச் சேர்ந்தவர் பழனியப்பன் (65). இவர் நஞ்சை ஊத்துக்குளியில் உள்ள தனியார் ஆலையில் விறகு லோடு இறக்கி கொண்டு இருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்த அவரை அங்கிருந்தவர்கள் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியில் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!