News January 3, 2026
கிருஷ்ணகிரி: சிலிண்டர் மானியம் வரவில்லையா? இத பண்ணுங்க

கூகுளில் mylpg என்று இணையத்தளத்தில் சென்றால், 3 கியாஸ் சிலிண்டர்களின் படங்கள் இருக்கும். அதில் நீங்கள் வாங்கும் சிலிண்டரை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து உங்கள் மொபைல் எண்ணை போட்டால், OTP வரும். அந்த நம்பரையும் போட வேண்டும். பின்னர், View Cylinder Booking History அல்லது Subsidy transferred என்ற விருப்பத்தை கிளிக் செய்தால் நீங்கள் மானியம் தொடர்பான விவரங்களை பார்க்கலாம். ஷேர் செய்யுங்கள்!
Similar News
News February 2, 2026
கிருஷ்ணகிரி: திடீர்னு பெட்ரோல் காலியா? இதை பண்ணுங்க!

கிருஷ்ணகிரி மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின்<
News February 2, 2026
கிருஷ்ணகிரியில் 7 வயது சிறுமி பரிதாப பலி!

கெலமங்கலத்தை சேர்ந்த கோபால கிருஷ்ணன் என்பவருடைய 7 வயது மகள் பிரநிதி. அப்பகுதியில் 2 வகுப்பு படித்து வந்த சிறுமி உடல் நலக்குறைவால் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று மாலை (பிப்.1) மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
News February 2, 2026
கிருஷ்ணகிரி: பாட்டியை அடித்து கொன்ற கொடூர பேரன்!

ஊத்தங்கரையை அடுத்த சென்னப்பநாயக்கனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராணி (57). இவா் தனது மகன்வழி பேரன் சிரஞ்சீவிக்கு (25) தனது பெயரில் புதிதாக பொக்லைன் எந்திரம் வாங்கிக் கொடுத்துள்ளாா். இந்நிலையில் நேற்று சிரஞ்சீவி வண்டிக்கான கடனை கட்டுவதற்கு பணம் கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் சிரஞ்சீவி ராணியை அடித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரந்தார். இதையடுத்து போலீசார் சிரஞ்சீவியை கைது செய்தனர்.


