News January 3, 2026
அழகம்மா அனுபமா பரமேஸ்வரன்

பாரம்பரியம் மற்றும் மார்டன் லுக் என இரண்டிலும் அழகாக வலம் வரும் நடிகை அனுபமா பரமேஸ்வரன், இன்ஸ்டாவில் லேட்டஸ்ட் போட்டோக்களை பதிவிட்டுள்ளார். அவரது போட்டோக்களை பார்த்து பூக்களின் வாசம் நீயோ, பூங்குயில் பாஷை நீயோ, பூமிக்கு ஊர்வலம் வந்த வானவில் நீயோ என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்கின்றனர். இந்த போட்டோக்கள் உங்களுக்கும் பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.
Similar News
News January 13, 2026
அமித்ஷாவை சந்தித்தாரா விஜய்?

CBI விசாரணைக்காக டெல்லி சென்றுள்ள விஜய், அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இரவில் சந்திக்க இருந்ததாக தகவல் வெளியானது. இதனால், NDA கூட்டணியில் தவெக இணைவது உறுதியானதாக பலர் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால் அப்படிப்பட்ட சந்திப்பே நடக்கவில்லை என தவெக தரப்பு உறுதியாக மறுத்துள்ளது. விசாரணை முடிந்து அறைக்கு வந்த விஜய், உடனே சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுக்க சென்றதாக கூறப்படுகிறது.
News January 13, 2026
ஈரான் மீதான தாக்குதலுக்கு தயாரானாரா டிரம்ப்?

ஈரான் மீது வான்வழி தாக்குதல் நடத்த டிரம்ப் பரிசீலித்து வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இருப்பினும் பேச்சுவார்த்தைக்கான கதவு திறந்தே இருப்பதாகவும், தெருக்களில் மக்களை கொல்வதை நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. <<18836892>>ஈரானில்<<>> அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்காவும், இஸ்ரேலும் போராட்டக்காரர்களை தூண்டிவிடுவதாக அந்நாட்டு அரசு குற்றஞ்சாட்டி வருகிறது.
News January 13, 2026
உங்களுக்கு இந்த ஃபோபியா இருக்கா?

ஏதோ ஒன்றின் மீது ஏற்படும் அதீத அச்ச உணர்வையே ஃபோபியா என்று கூறுகின்றனர். பயம் பொதுவாக அர்த்தமுள்ளதாக இருக்காது. ஆனால் அதை உணருபவர்களுக்கு அது உண்மையானது. மக்களிடையே பொதுவாக காணப்படும் அச்சங்கள் மற்றும் அதற்கு என்ன ஃபோபியா என்று மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோல், உங்களுக்கு என்ன பயம் இருக்கு? கமெண்ட்ல சொல்லுங்க.


