News January 3, 2026
தேர்தல் பணிகளை முடுக்கிவிட்ட அதிமுக

அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் சுற்றுப்பயணம் தொடர்பான விவரங்களை EPS வெளியிட்டுள்ளார். அதன்படி, வரும் 7-ம் தேதி வேலூர் மண்டலத்தில் தொடங்கும் பயணம் சேலம், விழுப்புரம், திருச்சி, தஞ்சை, மதுரை, நெல்லை என பயணித்து, 20-ம் தேதி சென்னை மண்டலத்தில் முடிவடைகிறது. அனைத்து தரப்பு பிரதிநிதிகளின் தேவைகளையும் அறிந்து தேர்தல் அறிக்கை குழுவிடம் வழங்க நிர்வாகிகளை EPS அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News January 12, 2026
வீட்டிலேயே பழங்களை வளர்த்து சாப்பிட ஆசையா?

தோட்டம் இல்லாதவர்களும் பழங்களை வளர்த்து சாப்பிட வேண்டுமா? வீட்டு மாடியில் அல்லது பால்கனியில் சில வகையான பழச் செடிகளை வளர்க்கலாம். குட்டை ரக செடிகள் ஏராளமாக உள்ளன. அவற்றை பூந்தொட்டியில் வைத்து வீடுகளிலேயே வளர்க்கலாம். இந்த செடிகளுக்கு 6-8 நேரம் சூரிய ஒளியும், சரியான பராமரிப்பும் தேவை. அந்த வகையில், என்னென்ன பழச் செடிகள் வளர்க்கலாம் என்பதை அறிய, மேலே உள்ள போட்டோக்களை ஸ்வைப் செய்து பாருங்க.
News January 12, 2026
மெஸ்ஸி செயலால் சரசரவென உயர்ந்த கொக்க கோலா மதிப்பு

பிரபலங்கள் பேசும் சிறிய விஷயங்கள் கூட நிறுவனங்களுக்கு பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கால்பந்து நட்சத்திரமான மெஸ்ஸி, ‘எனக்கு ஒயின் பிடிக்கும், நான் அதை ஸ்ப்ரைட்டுடன் சேர்த்து குடிக்கிறேன்’ என்று தெரிவித்தார். இதையடுத்து, கொக்க கோலா நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு 3 நாள்களில் ₹1.16 லட்சம் கோடி அதிகரித்தது. 2021-ல் ரொனால்டோ கோக் பாட்டிலை ஒதுக்கி வைத்ததால் பங்குகள் சரிந்தது குறிப்பிடத்தக்கது.
News January 12, 2026
தூங்கும்போதே பிரபல நடிகர் மரணம்.. மனைவி உருக்கம்

பிரபல பாடகரும் நடிகருமான பிரஷாந்த் தமாங் நேற்று காலமானார். அவருடைய மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில், அவரது மனைவி மார்த்தா அலே விளக்கமளித்துள்ளார். பிரஷாந்த் தமாங்கின் மரணம் முற்றிலும் இயற்கையானது; தூங்கும்போதே அவரது உயிர் பிரிந்ததாக உருக்கமாக தெரிவித்துள்ள மார்த்தா அலே, இதில் எந்த சந்தேகமும் இல்லை என்று தெளிவுப்படுத்தியுள்ளார்.


