News January 3, 2026
‘மகளிர் உரிமைத் தொகை ₹3,000’

தற்போது மகளிர் உரிமைத் தொகை ₹1,000 வழங்கப்பட்டு வருகிறது. இதனை ₹1,500 ஆக உயர்த்தப்படும் என EPS வாக்குறுதி அளித்துள்ளார். இந்நிலையில், மகளிர் உரிமைத் தொகையை ₹3,000 ஆக உயர்த்தி வழங்கும் வகையில் அதிமுக தேர்தல் அறிக்கையை தயார் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு பரிசீலித்து ஆலோசிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News January 14, 2026
தருமபுரி: ரயில்வேயில் 312 காலியிடங்கள்! APPLY NOW

தருமபுரி மாவட்ட மக்களே! ரயில்வே துறையில் காலியாக உள்ள 312 காலிப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு மாதம் ரூ.35,400 சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. விண்ணப்பிக்க ஜன.29ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <
News January 14, 2026
PAK-க்கு இந்திய ராணுவ தளபதி எச்சரிக்கை!

கடந்த சில நாள்களாக எல்லையில் பாக்., <<18851779>>ட்ரோன்<<>> அத்துமீறல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இதனை இந்தியா ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது என ராணுவ தளபதி உபேந்திர திவேதி எச்சரித்துள்ளார். இந்தியா தாக்குதல் நடத்துமோ என்ற அச்சத்தில் பாக்., ட்ரோன்களை ஏவுவதாக அவர் குறிப்பிட்டார். மேலும், சீனா, பாக்.,-க்கு போட்டியாக இந்தியா விரைவில் பிரத்யேக ‘ராக்கெட்-ஏவுகணை படை’ ஒன்றை உருவாக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
News January 14, 2026
பாஜகவுடன் விஜய் கூட்டணியா? முடிவை அறிவித்தார்

BJP தங்களின் கொள்கை எதிரி என்பதில் உறுதியாக இருப்பதாக தவெக செய்தித் தொடர்பாளர் லயோலா மணி உறுதிப்படுத்தியுள்ளார். திருவெற்றியூரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பேசிய அவர், தமிழகத்தில் BJP வளர்வது பெரும் ஆபத்து, அதனை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றார். முன்னதாக BJP-வுடன் மென்மையான போக்கை கடைப்பிடிக்கும் தவெக, NDA கூட்டணியில் இணையும் என அமைச்சர் TM அன்பரசன் உள்ளிட்டோர் பேசி வந்தனர்.


