News January 3, 2026

மீனவர்கள் பிரச்னை: மத்திய அரசுக்கு CM ஸ்டாலின் கடிதம்

image

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு CM ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு அவர் எழுதிய கடிதத்தில், இன்று சிறைபிடிக்கப்பட்ட மயிலாடுதுறை மீனவர்கள் 9 பேரை விடுவிக்க தூதரக ரீதியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இலங்கை வசமுள்ள மீனவர்களின் படகுகளை மீட்டு தர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Similar News

News January 25, 2026

தேர்தல் அறிவித்த பிறகுதான் எல்லாம் முடிவாகும்: வைகோ

image

தமிழ்நாட்டிற்கு கொடுக்க வேண்டிய நிதிகளை கொடுக்காமல் ஓரவஞ்சகம் செய்த PM மோடி, நேற்று வெறும் பொய்களை மட்டும் அவிழ்த்துவிட்டு சென்றதாக வைகோ விமர்சித்துள்ளார். தேர்தல் அறிவித்த பிறகுதான், எத்தனை தொகுதியில் போட்டி, தனிச் சின்னத்தில் போட்டியா என்பதெல்லாம் என்பது குறித்து முடிவுசெய்யப்படும். அதுகுறித்து இப்போதே சொல்ல முடியாது எனக் கூறிய அவர், திமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றார்.

News January 25, 2026

சூர்யாவின் 50-வது படத்தை இயக்குகிறாரா மாரிசெல்வராஜ்?

image

RJ பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ ரிலீஸுக்காக காத்திருக்கிறது. இதற்கு அடுத்தாக வெங்கி அட்லூரி இயக்கத்தில் ஒரு படத்திலும், ஜித்து மாதவன் இயக்கத்தில் ஒரு படத்திலும் சூர்யா நடிக்கிறார். இப்படி பிஸியாக உள்ள அவர் மாரி செல்வராஜுடன் இணைய உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அது அவரது 50-வது படம் எனவும் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. சூர்யா- மாரி காம்போ எப்படி இருக்கும்?

News January 25, 2026

TN-ஐ பேரழிவில் நிறுத்திய கேடுகெட்ட ஆட்சி: நயினார்

image

பிரபல ரவுடியை அழைத்து வந்த போலீசார் மீது <<18945501>>நாட்டு வெடிகுண்டு<<>> வீசப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக நயினார் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அதலபாதாளத்தில் வீழ்ந்து கிடப்பதற்கு இந்த ஒற்றைச் சம்பவமே சாட்சி. மக்கள் பாதுகாப்பை செதில் செதிலாகச் சிதைத்தது மட்டுமல்லாது, தற்போது போலீசார் பாதுகாப்பையும் சூறையாடி, தமிழகத்தை பேரழிவில் நிறுத்தியுள்ளது இந்த கேடுகெட்ட ஆட்சி என விமர்சித்துள்ளார்.

error: Content is protected !!