News May 3, 2024
நாமக்கல்: 6,120 போ் நீட் தேர்வு எழுதுகின்றனா்!

நீட் தோ்வு மே 5 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதுகின்றனா். தோ்வுக்காக 11 மையங்கள் தயாா் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு மையத்திலும் 5 போலீசார் வீதம் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஏற்பாடுகளை தேசிய தோ்வு முகமையின் நாமக்கல் மாவட்ட குழுவினா் செய்து வருகின்றனா்.
Similar News
News August 26, 2025
நாமக்கல் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (ஆக.25) வெளியிடப்பட்ட அறிவிப்பில், ’வாகன உரியாளர்மைகளுக்கு போக்குவரத்து விதிமீறல், தொடர்பாக உங்களுக்கு வரும் போலி குறுஞ்செய்தி லிங்குகள், APK File, தொலைபேசி அழைப்புகளை நம்ப வேண்டாம். உங்கள் வங்கி கணக்கிலிருந்து மோசடி நபர்களால் பணம் எடுக்கப்படும். மேலும், உதவிக்கு 1930, இணையதள புகார்களுக்கு www.cybercrime.gov.in தொடர்பு கொள்ளலாம்’
News August 26, 2025
நாமக்கல்: 4 சக்கர வாகன இரவு ரோந்து போலீசார் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் இரவு நேரங்களில் நான்கு சக்கர வாகன ரோந்து அதிகாரிகள் தினமும் நியமிக்கப்படுகிறார்கள் இந்நிலையில் இன்று
(ஆகஸ்ட்25) நாமக்கல்- ராஜமோகன் 94422-56423, ராசிபுரம்-சின்னப்பன் 94981-69092, குமாரபாளையம்- செல்வராஜு 99944-97140, பள்ளிபாளையம்- டேவிட் பாலு 94865-40373, வேலூர்-ரவி 94981-68482 ஆகியோர் உள்ளனர்.
News August 26, 2025
திருச்செங்கோட்டில் உயர்வுக்கு படி முகாம்!

திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனத்தில், வரும் (28-08-2025) வியாழக்கிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ‘உயர்வுக்கு படி’ முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு கல்விக்கடன், கல்லூரி சேர்க்கைக்கு தேவையான சான்றிதழ்கள், உதவித்தொகை விண்ணப்பித்தல், அரசு கலை (ம)அறிவியல் கல்லூரி/ பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடி சேர்க்கை உள்ளிட்ட வாய்ப்புகள் செய்து தரப்படுகிறது.