News January 3, 2026

பார்வை இல்லாதவர்களுக்கும் இனி பார்வை கிடைக்கும்!

image

பிறவியிலேயே பார்வை இழந்த, வாய் பேசமுடியாதவர்களுக்கு நியூராலிங்க் நிறுவனர் எலான் மஸ்க் புத்தாண்டு நற்செய்தி தெரிவித்துள்ளார். பார்வை மற்றும் குரலை மீட்டு தருவதற்கான சாதனங்களுக்கு FDA அங்கீகாரம் கிடைத்துள்ளது. மூளையில் சிப் பொருத்தப்பட்டு, பார்வை நரம்புகளின் வேலை செய்யப்படும். அதேபோல், மூளை நினைப்பதை கம்பியூட்டர் பேசும். இதற்கான பரிசோதனை உலகம் முழுவதும் தொடங்கி உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

Similar News

News February 12, 2026

இந்திய அணியில் மீண்டும் சஞ்சு சாம்சன்

image

T20 WC-ல் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற நமீபியா பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. உடல்நல பாதிப்பு காரணமாக அபிஷேக் சர்மா இந்த ஆட்டத்தில் விளையாடவில்லை. அவருக்கு பதில் சஞ்சு சாம்சனும், சிராஜுக்கு பதில் பும்ராவும் அணியில் இணைந்துள்ளனர். முதல் போட்டியில் USA-வை வீழ்த்திய இந்தியா, கத்துக் குட்டி அணியான நமீபியாவை எளிதாக வீழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News February 12, 2026

விடாமுயற்சி படம் போல் சிக்கிய இந்தியர்கள் மீட்பு

image

‘விடாமுயற்சி’ படத்தில் வருவதுபோல அஜர்பைஜானில் குஜராத்தைச் சேர்ந்த 2 பேர் கடத்தப்பட்டு நரக வேதனையை அனுபவித்துள்ளனர். துருவ்(22), தீபிகா(32) இருவரும் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைய அஜர்பைஜான் வழியாக சென்றுள்ளனர். அப்போது கடத்தல்காரர்களிடம் சிக்கிய அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டனர். கடத்தல்காரர்கள் குடும்பத்தினரிடம் பணம் கேட்டு மிரட்டிய நிலையில், இந்திய அரசின் உதவியோடு இருவரும் மீட்கப்பட்டனர்.

News February 12, 2026

தங்கம் விலை மேலும் குறைந்தது

image

தங்கம் விலை இன்று சவரனுக்கு ₹1,520 சரிந்து ₹1,16,800-க்கு விற்பனையாகிறது. இந்நிலையில், தற்போது சர்வதேச சந்தையில் 1 அவுன்ஸ் தங்கம் $10.70 குறைந்து $5,062.79 ஆக குறைந்துள்ளது. எனவே, நாளையும் தங்கம் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது. இதனால் நகைப் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக, மாசி முகூர்த்தத்தில் சுபகாரியங்கள் செய்யவுள்ளவர்கள் நகைக்கடைக்கு படையெடுத்து வருகின்றனர்.

error: Content is protected !!