News January 3, 2026

புத்தரின் சின்னங்கள், இந்தியாவின் ஆன்மா: PM மோடி

image

1898-ல் கண்டுபிடிக்கப்பட்ட புத்தரின் புனித நினைவுச் சின்னங்களின் கண்காட்சியை PM மோடி தொடங்கி வைத்தார். இந்த விழாவில் பேசிய அவர், புத்தர் அனைவருக்கும் சொந்தமானவர் என்றும் கூறினார். புத்தரின் புனித சின்னங்கள் வெறும் தொல்பொருள் கலைப்பொருள்கள் அல்ல; இந்திய பாரம்பரியத்தின் ஒரு பகுதி என்று அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் புனிதம் மீண்டும் தாய் திருநாட்டிற்கு திரும்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Similar News

News February 5, 2026

ஹிந்தி திணிப்பு கிருமியை கட்டுப்படுத்தணும்: கனிமொழி

image

சிவகாசி ரயில் நிலைய பெயர்ப்பலகையில், தமிழ் எழுத்துக்களை மாற்றி ஹிந்தியை இடம்பெறச் செய்தது சர்ச்சையாகியுள்ளது. தனது X பதிவில் கனிமொழி, சென்னை பூங்கா ரயில் நிலையத்தைத் தொடர்ந்து தற்போது சிவகாசியிலும் ஹிந்தியை முதன்மைப்படுத்தி பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளதாக சாடியுள்ளார். மேலும், நோய்த்தொற்றை போல ஊரெங்கும் பரவிடும் ஹிந்தி திணிப்புக் கிருமியைக் கட்டுப்படுத்தியாக வேண்டும் என தெரிவித்துள்ளார்.

News February 5, 2026

திமுக அரசின் ₹700 கோடி ஊழல்: அன்புமணி

image

திருவான்மியூர்-உத்தரண்டி 4 வழி உயர்மட்ட சாலை ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். ₹2,100 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை ஐதராபாத் நிறுவனத்திற்கு DMK அரசு வழங்கியதாகவும், ஆனால் ₹700 கோடி குறைவாக கோரப்பட்ட ஒப்பந்தபுள்ளியை திட்டமிட்டு நிராகரித்துள்ளனர் எனவும் சாடியுள்ளார். இதன் பின்னணியில் ஊழல் நடந்திருப்பதை யூகிக்க முடிவதால், CBI விசாரணை தேவை என்று வலியுறுத்தியுள்ளார்.

News February 5, 2026

SPORTS 360°: துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்

image

*வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் 23 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி *ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் ஈஷா சிங் தங்கம் வென்றுள்ளார் *U19 SAFF மகளிர் சாம்பியன்ஷிப்பில் இந்தியா 8-0 என்ற கோல் கணக்கில் பூடானை வீழ்த்தியது *ஆசிய ரைஃபிள் & பிஸ்டல் சாம்பியன்ஷிப் 2027 நடத்தும் உரிமையை டெல்லி பெற்றுள்ளது

error: Content is protected !!