News January 3, 2026
தருமபுரி: இனி ஆதார் கார்டு வாங்க.. HI போடுங்க!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News January 29, 2026
தர்மபுரி: Spam Calls-க்கு இனி ‘எண்டு கார்டு’

தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card என Spam Calls வருவதால், நமக்கு டென்ஷன்தான் மிச்சம். கள்ளக்குறிச்சி மக்களே, இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். ஆம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.
News January 29, 2026
சின்னப்பெருமன் ஏரி புணரமைக்கப்பட்டு, ஆட்சியர் சதீஷ் ஆய்வு

நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், டொக்குபோதனஅள்ளி ஊராட்சியில் ஏரி புணரமைத்தல் நிதி-2024-2025ன் கீழ் சின்னப்பெருமன் ஏரி புணரமைக்கப்பட்டு, மரக்கன்றுகள் நட்டு வைத்து, பராமரிக்கப்பட்டு வரும் பணிகளை ஆட்சியர் ரெ.சதீஸ், இன்று (ஜன.29) மாலை 3 மணி அளவில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் நல்லம்பள்ளி, வட்டார வளர்ச்சி அலுவலர் நீலமேகம் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
News January 29, 2026
நல்லம்பள்ளி சுகாதார நிலையத்தில் ஆட்சியர் சதீஷ் ஆய்வு

நல்லம்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆட்சியர் ரெ.சதீஸ், இன்று (ஜன.29) மாலை 3 மணி அளவில் ஆய்வு மேற்கொண்டு, சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். புற நோயாளிகள் பிரிவு, நோயாளிகள் பதிவு செய்யும் இடம் மற்றும் மருந்தகம், பொது மருத்துவம், பெண்கள் நலப்பிரிவு, ஆட்சியர் சதீஷ் ஆய்வு செய்தார்.


