News January 3, 2026

நாகை: கழிவறை கட்ட ரூ.12,000 ஊக்கத் தொகை!

image

தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), அனைத்து கிராமப் புற குடும்பங்களுக்கும் கழிவறை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தில் தகுதியுள்ள குடும்பங்களுக்கு தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டுவதற்கு ரூ.12,000 ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற உங்கள் கிராம ஊராட்சி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இதனை அனைவருக்கும் SHARE செய்து அவர்களும் பயனடைய உதவுங்கள்.!

Similar News

News January 15, 2026

நாகை: சிக்கல்களை தீர்க்கும் சிங்காரவேலர்

image

சிக்கல் சிங்காரவேலரை தரிசித்தால் சிக்கல்கள் தீரும் என்பது ஐதீகம். இங்கு முருகன் குழந்தைவரம் அருள்பவராக உள்ளார். சிவனின் சாபத்திற்கு ஆளான காமதேனு பசு இக்கோயில் குளத்தில் நீராடி சாப விமோசனம் பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் வசிஷ்ட முனி வெண்ணையை கொண்டு சிவலிங்கம் செய்து வழிபட்டார். பூஜை முடிந்து அதை எடுக்கையில் சிக்கி கொண்டது, ஆகையால் இந்த ஊருக்கு சிக்கல் என பெயர் வந்தது. இந்த தகவலை SHARE செய்யவும்…

News January 15, 2026

நாகை மாவட்டத்தில் புகைப்பட போட்டி

image

பொங்கல் சார்ந்த புகைப்பட போட்டிக்கு அனைவரும் கலந்து கொள்ளலாம். பொங்கலின் பாரம்பரியம், கிராமத்து வாழ்க்கை, உழைப்பு, மகிழ்ச்சி இவற்றை மொபைல் அல்லது DSLR மிரர் லெஸில் புகைப்படமாக எடுக்க வேண்டும். அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஜன.19 ஆகும். தேர்வு செய்யப்படும் புகைப்படங்கள் மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கங்களில் புகைப்படக் கலைஞரின் பெயருடன் வெளியிடப்படும் என நாகை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News January 15, 2026

நாகை: தேர்வு கிடையாது-போஸ்ட் ஆபீஸில் வேலை!

image

நாகை மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கு கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!