News January 3, 2026
புதுச்சேரியில் வாகன பேன்சி எண்கள் ஏலம்

புதுவை போக்குவரத்துத் துறை ஆணையரின் செய்திக் குறிப்பில், “புதுவை போக்குவரத்துத் துறையின் PY 02 Z (காரைக்கால்) வரிசையில் உள்ள பேன்சி எண்களை https://parivahan.gov.in/fancy இணையதளத்தில் வரும் 5-ம் தேதி காலை 11 மணி முதல் 13-ம் தேதி மாலை 4:30 வரை ஏலம் விடப்பட உள்ளது. இந்த ஏலத்தில் பங்கு பெற https://parivahan.gov.in/fancy இணையதளத்தில் வரும் 5-ம் தேதி முதல் முன்பதிவு செய்யலாம்.” என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 13, 2026
புதுச்சேரி: அல்மான்ட் இருமல் மருந்திற்கு தடை

பீகார் மாநில ‘ட்ரிடஸ் ரெமிடீஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பான, ‘அல்மான்ட் கிட் சிரப்’ என்ற மருந்திற்குத் புதுச்சேரி அரசு தடை விதித்துள்ளது. மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்ட ஆய்வில், இந்த சிரப்பில் சிறுநீரகத்தை மிகக் கடுமையாகப் பாதிக்கக்கூடிய, எத்திலீன் கிளைக்கோல் என்ற நச்சுப்பொருள் அனுமதிக்கப்பட்ட அளவை விட, மிக அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டதால், தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News January 13, 2026
புதுவை: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க…
News January 13, 2026
புதுவை காவல் துறை முக்கிய அறிவிப்பு

புதுவையில், கடந்த 06.12.2025 அன்று கூனிச்சம்பட்டு – மணலிபட்டு சாலையில் ஏற்பட்ட மோதலில், கூனிச்சம்பட்டு காலனியைச் சேர்ந்த வினாயகம் என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையின் போது இறந்தது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வீடியோ, புகைப்படம், ஒலி பதிவு அல்லது வேறு ஏதேனும் பதிவுகள் யாரிடமாவது இருந்தால் போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.


