News January 3, 2026
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்

விருதுநகர் வருவாய் கோட்டங்களில் வரும் ஜனவரி 13-ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. மாவட்டத்தில் வருவாய் கோட்டங்களான சிவகாசி, அருப்புக்கோட்டை, சாத்தூர் ஆகிய பகுதிகளில் சப் கலெக்டர் ஆர்டிஓ அலுவலகங்களில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
Similar News
News January 8, 2026
விருதுநகர் அருகே பெண் திடீர் தற்கொலை

அருப்புக்கோட்டை திருநகரத்தை சேர்ந்தவர் அர்ச்சுனன் என்பவரது மனைவி தில்லை சிவகாமி(52). அர்ச்சுணன் கடந்த ஒரு வருடத்திற்கு முன் இறந்த நிலையில் தில்லை சிவகாமி மன சோர்வுடன் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை தில்லை சிவகாமி வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். டவுன் போலீசார் இது குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News January 8, 2026
விருதுநகர் ஒரே நாளில் 415 பேர் கைது

விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களை அரசு ஊழியராக்குவேன் என்ற முதல்வரின் தேர்தல் வாக்குறுதி 313ஐ நிறைவேற்றுதல் உள்பட பல அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாவட்ட தலைவர் பவுன்தாய் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது.
மறியலில் ஈடுபட்ட 415 பேரை சூலக்கரை போலீசார் கைது செய்தனர்.
News January 7, 2026
BREAKING விருதுநகர்: கொலையில் மேலும் ஒருவர் கைது

காரியாபட்டி அருகே ஆவியூரில் கஞ்சா போதையில் வீட்டு பிரச்சினை காரணமாக ராமசாமி(33) என்பவர் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் பிரவீன்(20), அவரது நண்பர்களான செல்லப்பாண்டி(19), கருப்பசாமி (18), சஞ்சீவ்(18) ஆகிய 4 பேர் சரணடைந்த நிலையில் அவர்கள் போலீசார் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கிய அன்பரசனை(24) போலீசார் தற்போது கைது செய்தனர்.


