News January 3, 2026
நாகை: தொழில் தொடங்க கடன் உதவி

நாகை மாவட்டத்தில், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (UYEGP) கீழ், தொழில் தொடங்க ரூ.3.75 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு குறைந்தது 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்கும் குறைவாக உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் நாகை மாவட்ட தொழில் மையத்தை அணுகி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 7, 2026
நாகை: எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் மனு நாளில், காவல் கண்காணிப்பாளர் கே. எஸ்.பாலகிருஷ்ணன் பொதுமக்களை நேரில் சந்தித்து 7 மனுக்களை பெற்றார். பெறப்பட்ட மனுக்களுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். மேலும், மனுக்களை விரைந்து முடிக்க காவல் நிலைய பொறுப்பு அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
News January 7, 2026
நாகை: பெல் நிறுவனத்தில் வேலை

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள Trainee Engineer-I பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 119
3. சம்பளம்: ரூ.30,000 – ரூ.40,000
4. வயது: 21-28 (SC/ ST-33, OBC-31)
5. கல்வித் தகுதி: B.E / B.Tech
6. கடைசி தேதி: 09.01.2026
7. விண்ணப்பிக்க<
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News January 7, 2026
நாகை: மிக கனமழை எச்சரிக்கை!

வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நாகை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் வரும் ஜன.10-ம் தேதி (சனிக்கிழமை) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஷேர் பண்ணுங்க!


