News May 3, 2024
BREAKING: தேர்தலில் இருந்து ஒதுங்கினார் பிரியங்கா காந்தி

நாடாளுமன்றத் தேர்தலில் பிரியங்கா காந்தி இம்முறை போட்டியிடவில்லை. அமேதியில் அவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக காங்., மூத்த தலைவர் கே.எல்.ஷர்மா போட்டியிடுகிறார். இத்தொகுதியில் 2004 முதல் எம்பியாக இருந்த ராகுல் 2019இல் தோல்வியடைந்தார். இதனால், தனது சொந்த தொகுதியை விட்டுவிட்டு, தனது தாய் சோனியா காந்தி வெற்றிவாகை சூடிய ரேபரேலியில் களமிறங்குகிறார்.
Similar News
News December 8, 2025
நீண்ட நேரம் உட்கார்ந்தே இருக்கிறீர்களா? உஷார்!

வேலைப்பளு காரணமாக நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்தே இருக்கிறோம். இந்த பழக்கம் குடல் ஆரோக்கியத்திற்கு எதிரியாகிறது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். *வளர்சிதை மாற்றம், செரிமான செயல்முறைகளை மெதுவாக்குகிறது. *குடலில் சுருக்கங்கள் குறைவதால் கழிவுகள் நகர்வது கடினமாகிறது *குடலில் உள்ள பாக்டீரியாவின் சமநிலையை கெடுக்கிறது *மலச்சிக்கல், நெஞ்செரிச்சல், வயிறு உப்புசம் ஏற்படுகிறது.
News December 8, 2025
நாளை பள்ளிகள் விடுமுறையா?.. அரசு அறிவிப்பு

விஜய் பொதுக்கூட்டத்தையொட்டி புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என SM-ல் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், பள்ளி நேரம் தொடங்கிய பின் விஜய் வரவும், பள்ளி முடிவதற்கு முன்பே நிகழ்ச்சியை முடிக்கவும் திட்டமிட்டுள்ளதாக புதுச்சேரி டிஐஜி சத்தியசுந்தரம் அறிவித்துள்ளார். அதனால், நாளை விடுமுறை இல்லை. அதேநேரம், பொதுக்கூட்ட பகுதியில் ஒரேயொரு தனியார் பள்ளிக்கு நாளை விடுமுறை.
News December 8, 2025
உங்களுக்கு ப்ரோமோஷன் வேண்டுமா? இதுதான் முக்கியம்!

70-20-10 என்ற முறையில்தான் ப்ரோமோஷனுக்காக பரீட்சை நடக்கிறது. இதில் 70% பணி அனுபவம், 20% புதிய ஆலோசனைகளை வழங்குவது, 10% பாடங்கள் வழி கற்கும் திறன் போன்றவை அடங்கும். இதுமட்டுமல்லாமல், ப்ராஜெக்ட்டை கையாளுதல், அணியை நிர்வகித்தல், ஜூனியருக்கு ஆலோசனை&பயிற்சி வழங்குதல், நெருக்கடி நேரத்தில் எடுக்கும் முடிவு போன்றவற்றில் நீங்கள் எப்படி செயல்படுகிறீர்கள் என்பதையும் கருத்தில் கொள்கிறார்கள்.


