News January 3, 2026
கரூர் பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம் ▶️கோவை மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 04324-296570▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 ▶️ Toll Free 1800 4252 441 ▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 ▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. (ஷேர் பண்ணுங்க)
Similar News
News January 31, 2026
கரூர்: GPay, PhonePe, Paytm Use பண்றீங்களா? கவனம்!

மக்களே இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News January 31, 2026
கரூரில் சுக்குநூறான ஸ்கூட்டி.. தாய்,மகள் படுகாயம்!

கரூர் மாவட்டம் மூலிமங்கலத்தைச் சேர்ந்த மஞ்சு (36), நேற்று தனது மகள் சுவாதியுடன் ஸ்கூட்டியில் காளிபாளையம் அருகே சென்றபோது, சுரேஷ் என்பவர் ஓட்டி வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த தாய் மற்றும் மகள் இருவரும் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மஞ்சு அளித்த புகாரின் பேரில், வாங்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 31, 2026
கரூர் வேலைக்கு வந்த இடத்தில் சோகம்!

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஆகாஷ் போர்டோலி (23), கரூர் அப்பிபாளையத்தில் உள்ள டெக்ஸ்டைல் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் விடுதியில் இருந்தபோது அவருக்குத் திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக கரூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து தாந்தோணிமலை போலீசார் விசாரணை


