News January 3, 2026

வேலூர் மாவட்டத்தில் 7 லட்சம் வேட்டி சேலைகள் விநியோகம்

image

பொங்கல் பண்டிகை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 62 ஆயிரத்து 364 பேருக்கு வேட்டிகளும், 3 லட்சத்து 63 ஆயிரத்து 222 பேருக்கு சேலைகளும் என மொத்தம் 7 லட்சத்து 25 ஆயிரத்து 586 பேருக்கு வழங்கப்பட உள்ளது. தமிழ்நாடு அரசு தேதி அறிவித்த பின்னர் இலவச வேட்டி, சேலைகள் வினியோகம் செய்யும் பணி தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News

News January 26, 2026

வேலூரில் துணிகர சம்பவம்!

image

வேலூர் மாவட்டம் பழைய காட்பாடி பகுதியில் உள்ள மருந்து கடை உரிமையாளர் நேற்று (ஜன.25) கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து காட்பாடி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 26, 2026

வேலூரில் வாலிபருக்கு சரமாரி கத்திக்குத்து!

image

வேலூர் அடுத்த வசந்தபுரத்தை சேர்ந்தவர் முபாரக் (26). இவர் தனது நண்பர் வசந்த்துடன் நேற்றிரவு பாகாயத்திற்கு வந்தனர். அங்கு நின்றிருந்த ஒருவரிடம் முபாரக் தனது நண்பர் குறித்து விசாரித்து அவருடன் நண்பரை பார்க்க நம்பிராஜபுரம் மலையடிவாரம் சென்றார். அங்கு அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதில் அந்த நபர் கத்தியை எடுத்து முபாரக்கை வெட்டினார். இதுகுறித்து பாகாயம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

News January 26, 2026

வேலூர்: ஊருக்கு வந்த வீரர் உயிரை விட்ட சோகம்!

image

பள்ளிகொண்டா, வேப்பங்கால் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த ராணுவ வீரர் எழிலரசன் (35) இவர் சில நாட்களுக்கு முன் விடுமுறைக்காக ஊருக்கு வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் (ஜன.24) இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உழவு செய்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இது குறித்து அவரது தந்தை கருணாநிதி கொடுத்த புகாரின் பேரில் பள்ளிகொண்டா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!