News January 3, 2026
டிமாண்டை மேலும் அதிகரித்த காங்கிரஸ்

திமுகவிடம் 38 சீட்களை கேட்பதோடு 3 அமைச்சர் பதவிகளையும் காங்கிரஸ் டிமாண்ட் செய்வதாக தகவல் கசிந்துள்ளது. இதை கொடுத்தால் மட்டுமே கூட்டணி எனவும், குறைந்தபட்சம் வாய்வார்த்தையாக ஒப்புக்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாம். இதுகுறித்து ஆலோசனை நடத்த மல்லிகார்ஜுன கார்கேவை, ப.சிதம்பரம் கூடிய விரைவில் சந்திக்க உள்ளதாக பேசப்படுவதால் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.
Similar News
News January 12, 2026
‘லோகா’ நாயகியின் வெற்றி ரகசியம்!

‘லோகா’ படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமாகியுள்ளார் கல்யாணி பிரியதர்ஷன். இந்நிலையில், பல மொழிகளில் இருந்து தனக்கு புதிய பட வாய்ப்புகள் வருவதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார். எந்த மொழியாக இருந்தாலும் நல்ல கதை கிடைத்தால் நடிக்க தயார்; மராத்தி, ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் என மொழியை தான் ஒருபோதும் தடையாக பார்த்ததில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News January 12, 2026
தமிழர்களை இழிவாக பேசிய ராஜ் தாக்கரே!

மும்பை மாநகராட்சி தேர்தலையொட்டி <<18824079>>அண்ணாமலை<<>> பரப்புரை மேற்கொண்டார். இந்நிலையில், மகாராஷ்டிராவுக்கும், அண்ணாமலைக்கும் என்ன சம்பந்தம் என ராஜ் தாக்கரே (நவநிர்மான் சேனா) கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அண்ணாமலையை ரசமலாய் என விமர்சித்த அவர், தமிழர்களை தரக்குறைவாக கூறும் பால் தாக்கரேவின் சர்ச்சைக்குரிய ‘உத்தாவ் லுங்கி, பஜாவ் புங்கி’ என்ற முழக்கத்தை பயன்படுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
News January 12, 2026
BIG NEWS: 3 எம்எல்ஏக்கள் கட்சியில் இருந்து நீக்கம்

பாமக MLA-க்கள் 3 பேரை கட்சியிலிருந்து நீக்கி ராமதாஸ் அறிவித்துள்ளார். மயிலம் MLA சிவக்குமார், மேட்டூர் MLA சதாசிவம், தருமபுரி MLA வெங்கடேஸ்வரன் ஆகியோர் தொடர்ந்து கட்சி விரோத செயல்பாடுகளில் ஈடுபட்டு வருவதால் அவர்களை நீக்குவதாக ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். பாமகவுக்கு யார் தலைவர் என்பது ராமதாஸ் – அன்புமணி இடையே போட்டி நிலவும் நிலையில், இந்த நீக்கம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


