News January 3, 2026
ஈரோடு: ஈமு நிறுவன சொத்துக்கள் ஏலம்

ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்ட சில ஈமு கோழி நிறுவனங்கள் மோசடியில் ஈடுபட்டு கோவை டான்பிட் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது அந்நிறுவனங்களின் அசையும் அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. நீதிமன்ற உத்தரவுப்படி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் 7 ஆம் தேதி காலை 11 மணிக்கு நடக்கும் ஏலத்திற்கு டி ஆர் ஓ தலைமை வகிக்கிறார். ஏல நிபந்தனைகளை மாவட்ட இணையதள முகவரி www.erode.tn.nic.in ல் அறியலாம்.
Similar News
News January 16, 2026
ஈரோடு: 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <
News January 16, 2026
ஈரோட்டில் 225 குழந்தை திருமணங்கள்: அதிர்ச்சி தகவல்!

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு 225 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. சட்டப்படி 18 வயதுக்கு கீழ் உள்ள பெண், 21 வயதுக்கு உட்பட்ட ஆண்களின் திருமணத்தை குழந்தை திருமணமாக கருத வேண்டும். பெண்ணுக்கு 18 வயதும், ஆணுக்கு 21க்கு மேல் இருந்தால் மட்டுமே திருமணம் செய்து கொள்ள முடியும். அவ்வாறு 225 திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு 240 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
News January 16, 2026
ஈரோட்டில் பெண்களுக்கு இலவசம்!

ஈரோடு, சித்தோடு கனரா வங்கி கிராமப்புற சுய வேலைய வாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக ஜன.27 முதல் மார்.07 ஆம் தேதி வரை பெண்களுக்கான இலவச அழகுக்கலை பயிற்சி நடைபெறுகிறது. பயிற்சி, சீருடை, உணவு, ஹாஸ்டல் வசதி அனைத்தும் இலவசமாகவும், பயிற்சி முடிவில் அரசு சான்றிதழும் வழங்கப்படும் என பயிற்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் விபரங்களுக்கு 0424-2400338 என்ற எண்னை தொடர்பு கொள்ளவும். SHAREIT


