News January 3, 2026
ஓசூர்: இன்ஸ்டா காதலால் பறிபோன உயிர்!

ஓசூர், சூளகிரியை சேர்ந்தவர் தினேஷ் (19) தி.மலையில் ஒரு டீ கடையில் வேலை செய்து வருகிறார். காந்தி நகரில் வாடகை வீட்டில் தங்கி வந்துள்ளார். இந்நிலையில், ஊத்தங்கரையை சேர்ந்த பெண்ணுக்கும் இவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட, நேற்று தினேஷ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் இதுபற்றி விசாரிக்கின்றனர்.
Similar News
News January 13, 2026
கிருஷ்ணகிரி: முற்றிலும் இலவசம்… செம வாய்ப்பு

தமிழக அரசு சார்பில் ஏழை, விதவை, கணவன்&சமூகத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் செயல்படுகிறது. இதன்படி, தையல் எந்திரம் & துணை சாதனங்கள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். இதற்கு அருகில் உள்ள பொதுசேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம்.*செம திட்டம். தெரிந்த பெண்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க*
News January 13, 2026
கிருஷ்ணகிரி: திடீர்னு பெட்ரோல் காலியா? இதை பண்ணுங்க!

கிருஷ்ணகிரி மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் ‘<
News January 13, 2026
கிருஷ்ணகிரியில் ரிக் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்

கிருஷ்ணகிரியில் ரிக் உரிமையாளர்கள் நேற்று (ஜன.13) முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ரிக் தொழிலில் உதிரி பாகங்கள், ஆயில், டீசல் உள்ளிட்டவற்றின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்த விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டு வர வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக மாவட்ட ரிக் உரிமையாளர்கள் சங்க தலைவர் ஹைதர் அலி கூறியுள்ளார்.


