News January 3, 2026

தூத்துக்குடி: இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

image

விளாத்திகுளம் க.சுப்பிரமணியபுரம் தெற்கு தெரு பகுதியைச்சேர்ந்த முனியசாமி என்பவரின் மகன் பிரசாத் (24). இவருக்கு வாகன விபத்தின் காரணமாக காலில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக பிரசாத் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார், இதனால் மனவேதனையில் இருந்த பிரசாத் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விளாத்திகுளம் போலீசார் விசாரணை.

Similar News

News January 11, 2026

தூத்துக்குடி: போன் காணாமல் போச்சா? இனி கவலை வேண்டாம்!

image

உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இங்கே கிளிக்<<>> செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News January 11, 2026

தூத்துக்குடியில் ஆதார் மூலம் பணம் எடுக்கலாம்

image

தூத்துக்குடி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். இதில், குழந்தைகளுக்கான சேமிப்பு, முதியோருக்கான சேமிப்பு, குறைந்த செலவில் விபத்து காப்பீடு ஆகியவற்றை அஞ்சலகங்களில் ஜீரோ பேலன்ஸ் அகன்வுட் தொடங்கி பயன்பெறலாம். ஆதார் அட்டை மூலம் அனைத்து வங்கி கணக்கில் இருந்தும் பணம் எடுத்துக்கொள்ளும் சேவை அஞ்சலகங்களில் வழங்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

News January 11, 2026

தூத்துக்குடியில் திமுக பிரமுகரின் பைக் எரிப்பு

image

தூத்துக்குடி குரூஸ்புரத்தை சேர்ந்த டேனியல் மாநகர திமுக மீனவரணி அமைப்பாளராக உள்ளார். இவரது மனைவி மெட்டில்டா தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலராக உள்ளார். டேனியல் தனது பைக்கை வீட்டின் முன்நிறுத்தியிருந்தார். இந்நிலையில், மர்ம நபர்கள் அந்த பைக்குக்கு தீ வைத்துவிட்டு தப்பியுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வடபாகம் போலீசார் விசாரணையில் சாம்சன் என்பவர் பைக்கை தீ வைத்து எரித்தது தெரியவந்தது.

error: Content is protected !!