News January 3, 2026

தேனி அருகே வெள்ளபெருக்கு… போலீசார் எச்சரிக்கை.!

image

கேரளா, போடி. குரங்கணி, கொட்டகுடி பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த கன மழை நேற்று காலை வரை நீடித்தது. இதனால் கொட்டகுடி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து அணைப்பிள்ளையார் அணையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அணை தடுப்பணையை கடந்து வெள்ளப் பெருக்காக நீர் அருவியாய் கொட்டி வருகிறது. இங்கு சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் குளிக்க போலீசார் தடை விதித்து எச்சரித்துள்ளனர்.

Similar News

News January 13, 2026

தேனி: 5 பவுன் நகை கொள்ளை; இரவில் மர்மநபர்கள் கைவரிசை..

image

இராயப்பன்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜாகிர் உசேன். இவரது வீட்டின் அருகிலேயே இவரது தாய், தந்தையர் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் அவர்கள் இருவரும் அசந்து தூங்கிய நிலையில், வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த 5 பவுன் தங்க நகை மற்றும் செல்போனை திருடி சென்றனர். திருட்டு சம்பவம் குறித்து ராயப்பன்பட்டி போலீசார் நேற்று (ஜன.11) வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News January 13, 2026

குமுளியில் போக்குவரத்து மாற்றம் – SP அறிவிப்பு

image

சபரிமலை மகரஜோதி விழாவை முன்னிட்டு ஜன.14.ம் தேதி மாலை 5 மணி முதல் 15.ம் தேதி காலை 8 மணி வரை அனைத்து வாகனங்களும் கம்பம் புறவழிச்சாலை, கம்பம் மெட்டு வழியாக கேரளா செல்ல வேண்டும் எனவும். சபரிமலையில் இருந்து திரும்பும் பக்தர்கள் பம்பை, குட்டிக்காணம், பீர்மேடு, வண்டிப்பெரியாறு, குமுளி, கூடலூர், கம்பம் வழியாகத் திரும்பும் விதமாகவும் போக்குவரத்து மாற்றம் செய்து தேனி எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.

News January 13, 2026

தேனி: ஆட்டோ மோதி ஒருவர் பலியான சோகம்.!

image

அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ்மணி (75). இவர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள சாலையை கடக்க முற்பட்டுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத ஆட்டோ இவர் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சந்தோஷ் மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று முன்தினம் (ஜன.11) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!