News January 3, 2026

விருதுநகர்: கட்டட வேலை பார்த்தவர் பரிதாப பலி

image

விருதுநகர் அடுத்த சூலக்கரைமேடைச் சேர்ந்தவர் முருகன் 31. இவர் கட்டடங்களுக்கு சென்ட்ரிங் பலகை அடிக்கும் தொழில் செய்து வருகிறார். நேற்று சூலக்கரையில் காலை 11:30 மணிக்கு ஒரு வீட்டில் சென்ட்ரிங் பலகை அடிக்கும் போது இணைப்பு மின் ஒயரில் சுத்தியல் பட்டு மின்சாரம் தாக்கி பலியானார். சூலக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News January 7, 2026

இராப்பத்து மண்டபத்தில் ஆண்டாள், ரங்கமன்னார்

image

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்கழி நீராட்டு விழா பச்சை பரப்புதலுடன் தொடங்கி கடந்த வாரம் நிறைவடைந்தது. இந்நிலையில் 8-ம் நாளான இன்று இரவு இராப்பத்து மண்டபத்தில் ஆண்டாள், ரங்கமன்னார், பெரிய பெருமாள் மற்றும் சுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

News January 6, 2026

விருதுநகர்: பொங்கல் பரிசு வரலையா..? உடனே CALL!

image

விருதுநகர் 604039 ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுடன் சேர்த்து ரூ.3000 ரொக்கம் ஜன.13 க்குள் அனைவருக்கும் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில், வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ, டோக்கன்களை வீடுகளுக்கே சென்று வழங்காமல் இருந்தால் அல்லது தரம் குறித்த புகார்கள் இருந்தால் தயங்காமல் 1967 (அ) 1800-425-5901-ஐ அழைக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 6, 2026

விருதுநகரில் பொங்கல் பரிசு தொகுப்புக்கு டோக்கன் விநியோகம்

image

பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் விநியோகம் நேற்று முதல் துவங்கியது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 6 லட்சத்து 4,039 அரிசி ரேஷன் கார்டு தாரர்கள், இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்வதற்கான டோக்கன்கள் நேற்று முதல் துவங்கி நாளை வரை ரேஷன் விற்பனையாளர்கள் மூலம் கார்டுகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று வழங்கப்படுகிறது.

error: Content is protected !!