News January 3, 2026

கிருஷ்ணகிரியில் இன்று கரண்ட் கட்!

image

கிருஷ்ணகிரி மாவட்டம்ஜூஜூவாடி, பேகேபள்ளி, குருபரப்பள்ளி துணை மின் நிலையங்களில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக ஜூஜூவாடி, மூக்கண்டப்பள்ளி, பேகேபள்ளி, தர்கா, சிப்காட், சூர்யா நகர், குருபரப்பள்ளி, விநாயகாபுரம், ஜீனூர், நல்லூர், தீர்த்தம், சானசந்திரம், தொரப்பள்ளி & அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 19, 2026

கிருஷ்ணகிரி: உடல் கருகிய நிலையில் ஆண் சடலம்!

image

சூளகிரி அடுத்த சின்னார் பேடப்பள்ளி கிராமத்தில் இன்று (ஜன.19) காலை வயல்வெளியில் உடல் கருகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சூளகிரி போலீசார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார்? எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 19, 2026

கிருஷ்ணகிரி: பெண்களுக்கு ரூ.5000 + ரூ.6000 நிதியுதவி!

image

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் மூலம் கர்ப்பிணிகளுக்கு (5000+6000) வழங்கப்படுகிறது. இதன்படி கருவுற்ற பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு 3 தவணைகளில் ரூ.5,000 வழங்கப்பட்டு வருகிறது. பின்னர் இரண்டாவது குழந்தை பெண் குழந்தையாக இருந்தால், அதற்கு ரூ.6000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகே உள்ள சுகாதார மையத்திலோ (அ) <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணபிக்கலாம். இதை உடனே ஷேர் பண்ணுங்க.

News January 19, 2026

கிருஷ்ணகிரி: தூக்கில் தொங்கிய மாணவி!

image

தளி அருகே சாரண்டப்பள்ளியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரது மகள் பல்லவி (14). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகததால் மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில் மாணவி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!