News January 3, 2026
கரூர்: வாகனத்தில் இருந்து தடுமாறி விழுந்தவர் உயிரிழப்பு

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பஞ்சப்பட்டி அடுத்த காரைக்குடியைச் சேர்ந்தவர் அழகப்பன் (75). இவர் கடந்த வாரம் தனது டிவிஎஸ் எக்ஸ்எல் வாகனத்தில் கள்ளை மாரியம்மன் கோவில் செல்வதற்காக கே. துறையூர் சாலையில் சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் மகன் சுதாகர் புகாரில் தோகைமலை போலீசார் இன்று வழக்கு பதிவு செய்தனர்.
Similar News
News January 13, 2026
கரூர்: ஆதார் அட்டை வாங்க இனி ஒரு Hi போதும்!

கரூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இது வேலை செய்யவில்லை என்றால் <
News January 13, 2026
கரூர்: பெண்ணை அதிரடியாகக் கைது செய்த போலீசார்!

கரூர் மாவட்டம் கூடலூர் பனையம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி மனைவி மகேஸ்வரி சக்தி (42). இவர் அப்பகுதியில் உள்ள தனது வீட்டின் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற சின்னதாராபுரம் போலீசார் மது விற்ற மகேஸ்வரி சக்தி மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 28 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்
News January 13, 2026
கரூர்: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377
2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639
3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.கடலோர பகுதியில் அவசர உதவி-1093
8.ரத்த வங்கி – 1910
9.கண் வங்கி -1919
10.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989


