News January 3, 2026
திருப்பூர்: நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்

திருப்பூர், தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து துறை நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் மடத்துக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 3-1-26 காலை 9 மணி முதல் 4 மணி வரை நடைபெற உள்ளது. பொது மருத்துவ சிகிச்சை பிரிவு, இருதய நோய் சிகிச்சை பிரிவு ,பல் மருத்துவ பிரிவு, குழந்தைகள் நலப் பிரிவு, காது மூக்கு தொண்டை பிரிவு, நரம்பியல் பிரிவு எலும்பு மூட்டு பரிசோதனை செய்யப்படும்.
Similar News
News January 13, 2026
பாதயாத்திரையில் சோகம்: திருப்பூர் பெண் பலி

திருப்பூரைச் சேர்ந்த சத்யா (57) என்பவர், பழனி முருகனை தரிசிக்கத் திருப்பூரில் இருந்து பாதயாத்திரையாக புறப்பட்டார். நேற்று பழனி – தாராபுரம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதிவிட்டு சென்றது. இதில் பலத்த காயமடைந்த சத்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கீரனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 13, 2026
திருப்பூரில் ட்ரோன் பறக்க தடை

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் வரும் ஜன.14, 15 ஆகிய தேதிகளில் திருப்பூர் மாவட்டத்திற்கு வருகை தருகிறார். அவர் கணக்கம்பாளையம் மற்றும் பிச்சம்பாளையம் பகுதிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இந்நிலையில் துணை ஜனாதிபதியின் வருகையையொட்டி அப்பகுதியில் ட்ரோன் பறக்க தடை விதித்து கலெக்டர் நாரணவரே மனீஷ் ஷங்கர்ராவ் உத்தரவிட்டுள்ளார்.
News January 13, 2026
திருப்பூர்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் (ஜன.12) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால், உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.


