News January 3, 2026

விருதுநகர்: 4 அணைகளில் மீன் பாசி குத்தகை

image

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பெரியாறு, கோவிலாறு, குன்னூர் சந்தை இருக்கன்குடி ஆகிய நான்கு அணைகளில் மீன் பாசி குத்தகை உரிமைக்கு ஒப்பந்த புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன. இவை ஐந்து ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்படும். ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பத்தை www.tntenders.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தகவல் தெரிவித்துள்ளார்.

Similar News

News January 17, 2026

ஸ்ரீவி.யில் விஷம் குடித்து இளைஞர் தற்கொலை

image

ஸ்ரீவில்லிபுத்துார் பகுதியில் ஒரிசா மாநிலத்தை சேர்ந்த சமரசர்தார் (26) என்பவர் தனியார் மில்லில் பார்த்து வந்துள்ளார். பெற்றோர் இல்லாத இவர், மதுவுக்கு அடிமையாகி மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஜன.12ல் விஷம் குடித்த இவரை அங்குள்ளவர்கள் மீட்டு விருதுநகர் G.H-ல் சேர்த்துள்ளனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து மல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 17, 2026

விருதுநகர்: டிகிரி போதும்., விவசாய வங்கியில் வேலை ரெடி!

image

விருதுநகர் மக்களே, தேசிய விவசாய – கிராம வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு பணிகளுக்கு 162 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் ibpsreg.ibps.in/nabhindec25/ – என்ற தளத்தில் பிப். 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ,32,000 வழங்கப்படும். தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE IT.

News January 17, 2026

விருதுநகர்: பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை

image

சாத்தூர் பகுதியை சேர்ந்த ராஜவேல்முருகன் என்பவரது மகன் பத்மேஷ் (12). இவர் 7-ம் வகுப்பு படித்து வந்தார். பத்மேஷ் மற்றும் தம்பி இருவரும் சைக்கிளில் விளையாடியபோது தம்பி கீழே விழுந்துள்ளார். இதனால் ராஜவேல்முருகன், பத்மேஷை திட்டியதாக தெரிகிறது. இதனை அடுத்து, பத்மேஷ் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் சாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!