News May 3, 2024

சுட்டிக்காட்டிய வே டூ – உடனடி நடவடிக்கை

image

நாகை மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலமான வேளாங்கண்ணி கடற்கரையில் குப்பைகள் தேங்கி இருப்பதாக வீடியோவுடன் வே டூ நியூஸில் செய்தி வெளியானது. இந்நிலையில் அதன் எதிரொலியாக வேளாங்கண்ணி பேரூராட்சி மன்ற தலைவர் டயானா சர்மிளா உத்தரவின் பேரில் தூய்மை பணியாளர்கள் கடற்கரையில் தேங்கியிருந்த குப்பைகளை அகற்றி மக்கும் குப்பை மற்றும் மக்கா குப்பையாக தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Similar News

News August 17, 2025

மாணவர்களை எச்சரித்த நாகை ஆட்சியர்!

image

நாகை மாவட்ட ஆட்சியர் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ கல்லூரி சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசின் இணையதளம் வாயிலாக நடைபெறும் கலந்தாய்வில் மட்டுமே இடஒதுக்கீடு செய்யப்படுகிறது. எனவே மருத்துவ படிப்பிற்கு சீட் வாங்கி தருவதாக கூறும் இடைதரகர்களை நம்ப வேண்டாமென மாணவர்களுக்கு ஆட்சியர் எச்சரித்துள்ளார்

News August 17, 2025

நாகை: MBA முடித்தவர்களுக்கு ரூ.93,000 சம்பளத்தில் வேலை

image

மத்திய பொதுத்துறை வங்கியான யூனியன் பேங்கில் காலியாக உள்ள 250 மேனேஜர் பணியிடங்கள் நிரப்பபடவுள்ளன. இதற்கு MBA முடித்த, 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.93,960 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<> இங்கே கிளிக்<<>> செய்து, வரும் ஆகஸ்ட் 25-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான எழுத்து தேர்வு திருச்சி மற்றும் தஞ்சையில் நடைபெற உள்ளது. வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.

News August 17, 2025

நாகை: திடீர் மின்தடையா ? உடனே கால் பண்ணுங்க!

image

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!

error: Content is protected !!