News January 3, 2026
திண்டுக்கல் இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (ஜன.02) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News January 16, 2026
நத்தம் கிரகணத்தால் மாறிய தேதி!

நத்தம் மாரியம்மன் கோவில் மாசிப்பெருந்திருவிழா தேதி சந்திரகிரகணம் முன்னிட்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதன்படி பிப்ரவரி 23-ம் தேதி திங்கள்கிழமை கொடியேற்றமும், 24-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை கரந்தமலை கன்னிமார் தீர்த்தம் அழைத்து வரப்பட்டு காப்பு கட்டும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி திருவிழா மார்ச் 10-ம் தேதியும் மறுநாள் 11-ம் தேதி பூப்பல்லக்கு நடைபெறும்.
News January 16, 2026
திண்டுக்கல்: குழந்தை வரம் பெற இங்கே போங்க

திண்டுக்கல் வெள்ளி மலை உச்சியில் புகழ்பெற்ற முருகன் கோயில் உள்ளது. இங்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லாதவர்கள் அமாவாசை, வைகாசி விசாகம் போன்ற நாட்களில் தங்கி, தீர்த்தகிணற்றில் நீராடினால், பிள்ளைபேறு கிடைக்கும். அதுமட்டுமல்லாது நோய்வாய்ப்பட்டவர்கள் மனஉளைச்சலில் தவிப்பவர்களுக்கு, இக்கோயில் தங்கி முருகனை வழிப்பட்டால் நலம் பெறுவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.மற்ற பக்தர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க
News January 16, 2026
பழனி அருகே பயங்கரம்: 5 வயது சிறுவன் பலி

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சித் என்பவர் குடும்பத்துடன் பழநி கோதைமங்கலம் பகுதியில் வசித்து வருகிறார். இவரது 5 வயது மகன் சிவா,புது தாராபுரம் சாலை அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த சரக்கு வாகனம் எதிர்பாராதவிதமாக மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பழனி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


