News January 2, 2026

ஈரானில் அமெரிக்க படைகள் இறங்கும்: டிரம்ப்

image

ஈரானில் அமைதி போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது அந்நாட்டு அரசு துப்பாக்கிச்சூடு நடத்தினால் அமெரிக்கா தனது படைகளை களமிறக்கும் என டிரம்ப் எச்சரித்துள்ளார். தங்களது படைகள் முழு ஆயத்தங்களுடன் தயார்நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், தங்கள் உள்நாட்டு விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என <<18738812>>ஈரான்<<>> அரசு தலைவரின் ஆலோசகர் அலி லாரிஜனி பதிலடி கொடுத்துள்ளார்.

Similar News

News January 13, 2026

ஆண்டுக்கு ஒருமுறை திறக்கப்படும் மர்ம கோயில்!

image

ம.பி.,யில் பன்னா மாவட்டத்தில் உள்ள அஜய்கர் கோட்டையில் 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயில் ஒன்று உள்ளது. இது ஆண்டுக்கு ஒருமுறை மகர சங்கராந்திக்கு மட்டும் திறக்கப்படும். இங்கு நிரந்தர சிலைகள் இல்லை. இந்த கோயில் அமைந்துள்ள கோட்டையில் சீல் வைக்கப்பட்ட பல ரகசிய சுரங்கங்கள் உள்ளன. இரவு நேரங்களில் தாந்திரீக சடங்குகளை செய்ய பலர் இக்கோட்டைக்கு செல்வதாக கூறப்படுவதால் மர்மமான கோயிலாக இது உள்ளது.

News January 13, 2026

இனி பாகிஸ்தானை தொட்டால் 3 நாடுகள் தாக்கும்!

image

<<17745829>>பாகிஸ்தான் – சவுதி<<>> இடையிலான ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் இணைய துருக்கி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன்மூலம் இஸ்லாமிய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பை உருவாக்க முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் படி, ஏதேனும் ஒரு நாடு மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அது மற்ற 2 நாடுகளின் மீதான தாக்குதலாக கருதப்பட்டு, 3 நாடுகளும் இணைந்து எதிர் தாக்குதலில் ஈடுபடும்.

News January 13, 2026

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பொன்மொழிகள்

image

*அறியாமையை விட ஆபத்தான ஒரே விஷயம் ஆணவம். *பலவீனமானவர்கள் பழிவாங்குகிறார்கள். வலிமையானவர்கள் மன்னிக்கிறார்கள். புத்திசாலிகள் பொருட்படுத்தாமல் விட்டுவிடுகிறார்கள். *அறிவை விட கற்பனை முக்கியமானது. அறிவுக்கு எல்லை உண்டு. கற்பனை உலகைச் சுற்றி வருகிறது. *எதையாவது நீங்கள் நம்புவதால் மட்டுமே, அது உண்மை என்று அர்த்தமாகாது. *3 பெரிய சக்திகள் உலகை ஆளுகின்றன: முட்டாள்தனம், பயம் மற்றும் பேராசை.

error: Content is protected !!