News January 2, 2026
அதிமுகவில் இருந்து விலகி விஜய் கட்சியில் இணைந்தார்

செங்கோட்டையனை தொடர்ந்து அதிமுக நிர்வாகிகள் பலர் தவெகவில் இணையவிருப்பதாக பேச்சு அடிபடுகிறது. அந்த வகையில், அதிமுக திருச்செங்கோடு Ex சேர்மன் பாலசுப்பிரமணியன், அருண்ராஜ் முன்னிலையில் தவெகவில் இணைந்துள்ளார். MGR காலத்திலேயே ஒன்றிய சேர்மனாக இருந்த அவர், திருச்செங்கோடு அதிமுகவின் முகமாக விளங்கினார். 2026 தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியில் அருண்ராஜ் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 13, 2026
விஜய் ரசிகர்களை எச்சரித்த ‘பராசக்தி’ தயாரிப்பாளர்

‘பராசக்தி’ படம் குறித்து விஜய் ரசிகர்கள் திட்டமிட்டு அவதூறு பரப்பி வருவதாக அப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான தேவ் ராம்நாத் குற்றஞ்சாட்டியுள்ளார். கடந்த ஆண்டில் ரிலீசான ஒரு படத்திற்கும் இதேபோன்று அவர்கள் செய்தனர். உங்கள் படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் நாங்களா தடுத்தோம்? நாங்கள் தான் ரிலீஸ் தேதி முதலில் அறிவித்தோம். விஜய் ரசிகர்களின் செயல் யாருக்கும் நல்லதல்ல என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
News January 13, 2026
இன்றைய நல்ல நேரம்

▶ஜனவரி 13, மார்கழி 29 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 1:30 AM – 2:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: தசமி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்.
News January 13, 2026
புது சட்டம் அமலுக்கு வரும் முன்பே விலை உயர்வு!

புதிய கலால் திருத்த மசோதா வரும் பிப்.1-ல் அமலுக்கு வர உள்ளது. அதன்படி, <<18461895>>சிகரெட்<<>> உள்ளிட்ட புகையிலை பொருள்களுக்கான வரி பல மடங்கு உயர்த்தப்பட உள்ளது. ஆனால், இந்த சட்டம் அமலுக்கு வரும் முன்பே பல்வேறு பகுதிகளில் சிகரெட்டுகளின் விலை அதிகரித்துள்ளது. மொத்த வியாபாரிகள் பதுக்க தொடங்கி, குறைந்த அளவில் மட்டுமே விற்பனைக்கு அனுப்பவதால், அனைத்து வகையான புகையிலை பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.


