News January 2, 2026

‘ஜனநாயகன்’ படம் ரிலீசாவதில் திடீர் சிக்கல்

image

‘ஜனநாயகன்’ ரிலீஸுக்கு இன்னும் 7 நாள்களே இருக்கும் நிலையில், அப்படத்திற்கு புதிய சிக்கல் ஒன்று எழுந்துள்ளது. படத்திற்கான அனைத்து பணிகளையும் முடித்து தணிக்கைக்கு கடந்த மாதம் படக்குழு அனுப்பியுள்ளது. கடந்த டிச.19-ம் தேதி படத்தை பார்த்த தணிக்கைக்குழு சில காட்சிகளை நீக்க கூறியிருந்தது. அந்த காட்சிகளை நீக்கிய பிறகும் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால், படம் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளது.

Similar News

News February 5, 2026

ஆளே மாறிப்போன குஷ்பு!

image

பாஜக மாநில துணைத் தலைவராக உள்ள குஷ்பு சுந்தர், சமீப காலமாக உடல் எடை குறைப்பில் கவனம் செலுத்தி வந்தார். தற்போது அவர் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு எடையை குறைத்துள்ளார். இன்ஸ்டாவில் அவர் பதிவிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஸ், அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. குஷ்புவா இது என நெட்டிசன்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலே உள்ள போட்டோஸை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க.

News February 5, 2026

விஜய் கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு

image

தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தவெகவிற்கு பின்னடைவை ஏற்படுத்தும்படியான செய்தி வெளியாகியுள்ளது. சேலத்தில் நடைபெறவிருந்த தவெக பிரசார கூட்டத்திற்கு போலீஸ் அனுமதி மறுத்துள்ளது. பிப்.13-ம் தேதி<<19044768>> சேலம் தாளமுத்து நடராசன்<<>> மைதானத்தில் விஜய் பங்கேற்கும் பிரசார கூட்டத்திற்கு தவெக தரப்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், தேர்தல் வழிகாட்டு நெறிமுறைகள் சரியாக இல்லை எனக்கூறி போலீஸ் இந்நடவடிக்கை எடுத்துள்ளது.

News February 5, 2026

பிறந்த குழந்தைக்கு எப்போது TV காட்டணும் தெரியுமா?

image

பிறந்து 6 மாதங்களே ஆன குழந்தைகளுக்கு கூட தற்போது TV-ல் ’உருளக்கிழங்கு செல்லக்குட்டி’ என ரைம்ஸ் காட்ட ஆரம்பித்துவிட்டனர். ஆனால் உங்கள் குழந்தைக்கு 18 மாதங்கள் ஆன பிறகே TV பார்க்க அனுமதிக்கவேண்டும் என அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் கூறியுள்ளது. அதிலும் கூட கண்கள், மூளைத்திறனை பாதிக்கும் என்பதால் Bright Colours கொண்ட கார்டூன்களை அவர்களுக்கு காட்டக்கூடாது என டாக்டர்கள் சொல்கின்றனர். SHARE.

error: Content is protected !!