News January 2, 2026

வங்கி கணக்கில் ₹10,000.. தமிழக அரசு புதிய அறிவிப்பு

image

CM திறனாய்வு தேர்வுக்கு 10-ம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கும் அவகாசத்தை TN அரசு நீட்டித்துள்ளது. புதிய அறிவிப்பின்படி, ஜன.6 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஜன.31-ல் தேர்வு நடைபெற உள்ள நிலையில், இதில் செய்யப்படும் தகுதியான 1,000 மாணவர்களுக்கு, ஒரு கல்வியாண்டுக்கு தலா ₹10,000 உதவித்தொகை வழங்கப்படும். <>www.dge.tn.gov.in<<>> தளத்தில் டவுன்லோடு செய்யப்படும் விண்ணப்பத்தை நிரப்பி HM வசம் ஒப்படைக்க வேண்டும்.

Similar News

News January 13, 2026

இனி வேலைக்கு ஆட்கள் எடுப்பது ஈஸி

image

சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! WAY2NEWS செயலியில் இப்போது ‘உள்ளூர் வேலைவாய்ப்புகள்’ அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் நிறுவனத்திற்குத் தேவையான ஆட்களை நேரடியாகத் தேர்வு செய்ய இது ஒரு சிறந்த வாய்ப்பு. உங்கள் உள்ளூர் வேலை விளம்பரங்களைப் பதிவிட இப்போதே கீழே உள்ள <>படிவத்தைக் கிளிக்<<>> செய்யுங்கள். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News January 13, 2026

ஸ்டிரைக் அறிவிப்பு.. தமிழக அரசுக்கு புதிய நெருக்கடி

image

தூய்மைப் பணியாளர்கள், ஆசிரியர்கள், ஊராட்சி செயலாளர்களை தொடர்ந்து, தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுக்க சத்துணவு ஊழியர்களும் தயாராகி வருகின்றனர். சிறப்பு காலமுறை ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 8-ம் தேதி அடையாள போராட்டத்தை நடத்தினர். இந்நிலையில், பொங்கல் விடுமுறை முடிந்தவுடனே ஜன.20-ம் தேதி முதல், வேலை நிறுத்தம் செய்யப்போவதாக சத்துணவு ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

News January 13, 2026

₹72 கோடி கொடுப்பதால் ‘கைதி 2’-ஐ ஓரங்கட்டினாரா லோகேஷ்?

image

சூர்யாவுக்கு சொன்ன ‘இரும்புக்கை மாயாவி’ கதையை அல்லு அர்ஜுனுக்கு சொல்லி லோகேஷ் ஓகே வாங்கியதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்நிலையில், அப்படத்தில் அவருக்கு ₹72 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும், அடுத்த ஒரு மாதத்திற்குள் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இவ்வளவு சம்பளம் கொடுக்கப்படுவதால் தான் ‘கைதி 2’ படத்தை அவர் ஓரங்கட்டியதாகவும் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

error: Content is protected !!