News January 2, 2026
காயத்தால் தவிக்கும் TN நட்சத்திரம் சாய்சுதர்சன்

விஜய் ஹசாரே தொடரில் ம.பி., அணிக்கு எதிரான போட்டியில் தமிழக வீரர் சாய்சுதர்சன் காயமடைந்துள்ளார். ரன் எடுக்க ஓடியபோது கீழே விழுந்த அவருக்கு, விலா எலும்பு முறிந்ததாக கூறப்படுகிறது. இப்போது பெங்களூரு centre of excellence-ல் சிகிச்சையில் உள்ள சாய் சுதர்சன் வேகமாக குணமடைந்து வருகிறாராம். IPL தொடங்குவதற்கு முன் அவர் காயத்தில் இருந்து மீண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News January 25, 2026
திமுகவுக்கு இறுதி தேர்தல்: EPS

4-ல் ஒரு பங்கு வாக்குறுதியை கூட திமுக அரசு நிறைவேற்றாததால், அனைத்து தரப்பு மக்களும் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளதாக EPS சாடியுள்ளார். சென்னை சூளைமேட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக மீண்டும் ஆட்சிக்கு வராது எனவும், வரும் தேர்தல் தான் அவர்களுக்கு கடைசி தேர்தல் என்றும் விமர்சித்தார். மேலும், தங்களது கூட்டணியில் மேலும் சில கட்சிகள் ஓரிரு நாள்களில் இணைய உள்ளதாகவும் தெரிவித்தார்.
News January 25, 2026
மேலும் ஒரு இந்து இளைஞர் தீ வைத்து எரிப்பு!

இந்துக்கள் கொல்லப்படுவது வங்கதேசத்தில் தொடர்கதையாகி வருகிறது. மெக்கானிக் கடையில் வேலை பார்த்து வந்த சன்சல் பவுமிக்(23), கடந்த 23-ம் தேதி எரித்து கொல்லப்பட்டுள்ளார். இரவு கடையை மூடிவிட்டு கிளம்பும் போது, அவர் மீது தீ வைத்த சிலர் கடைக்குள் தள்ளி ஷட்டரை மூடியுள்ளனர். இதில், சன்சல் துடிதுடித்து மரணமடைந்துள்ளார். இது திட்டமிட்ட கொலை என சன்சலின் குடும்பத்தினரும் உறவினர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.
News January 25, 2026
பள்ளிகளில் ‘அயலி’ திரைப்படம்

பெண் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ‘அயலி’ வெப் சீரிஸை அரசுப் பள்ளிகளில் ஒளிபரப்ப பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மாதந்தோறும் சிறார் படம் திரையிடப்பட்டு வரும் நிலையில், ஜனவரியில் அயலி திரையிட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 2023-ல் வெளியான அயலி சர்வதேச திரைப்பட விழாக்களில் பல விருதுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.


