News January 2, 2026
மை பேனாவில் ஒரு வார்த்தை எழுதுவோமா..!

‘பேனா’ என்பது எல்லையில்லா அற்புதங்களை நிகழ்த்தும் என்று நமக்கு தெரியும். இந்த பேனாவை பிடித்து எழுதுவதற்காக நாம் பள்ளியில் சேர்ந்தாலும் குறைந்தது 5 ஆண்டுகளாவது (6th std) காத்திருந்திருப்போம். இன்றோ மை ஊற்றிய பேனாவை நாம் மறந்திருக்கலாம். இன்றைய உங்கள் பணிக்கு அது தேவைப்படவில்லை என்றாலும், ஒரு பேனாவை வாங்கி தினமும் ஒரு பக்கமாவது எழுதுங்களேன். அப்படி எழுதினால் முதலில் எந்த வார்த்தையை எழுதுவீர்கள்?
Similar News
News February 3, 2026
தேர்தல் தேதி அறிவித்தாலும் மாநாடு உண்டு: KN நேரு

தமிழக தேர்தல் தேதி பிப்ரவரி இறுதி (அ) மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, மார்ச்.8-ல் திருச்சியில் திமுக மாநில மாநாடு நடைபெறவுள்ளது. இந்நிலையில், தேர்தல் தேதி அறிவிப்பு வந்தாலும், திட்டமிட்டபடி மாநாடு நடைபெறும் என அமைச்சர் KN நேரு தெரிவித்துள்ளார். மாநாடு செலவுகள் குறித்தும் ECI-யிடம் சமர்ப்பிக்கப்படும் என்றார்.
News February 3, 2026
நல்லா தூங்கினாலும், சோர்வாகவே இருக்கா?

இரவில் நன்றாக தூங்கினாலும், காலையில் சோர்வாகவே இருக்கீங்களா? இதனை சாதாரணமாக எடுக்க வேண்டாம். இதற்கு பல காரணங்கள் இருக்கிறது. மன அழுத்தம், தைராய்டு பிரச்னை, மதுபழக்கம், இரும்பு சத்து குறைபாடு, தூங்கும் மெத்தை சரியில்லாமல் இருப்பது இதற்கான காரணமாக இருக்கலாம் என டாக்டர்கள் சொல்றாங்க. இதை சரி செய்யவில்லை என்றால் நாளடைவில் இதய பிரச்னைகள் வரலாம். உடனே டாக்டரை அணுகுங்கள். SHARE.
News February 3, 2026
பாஜகவுக்கு TN-ல் #GETOUT தான்: CM ஸ்டாலின்

ஒவ்வொரு நாளும் அண்ணனை நினைக்கும் நாள்தான் எங்களுக்கு என Ex.அண்ணாதுரையின் நினைவு நாளையொட்டி CM ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். TN-க்கு துரோகிகளையெல்லாம் துணைக்கு அழைத்துக் கொண்டு வந்தாலும், பாஜக அரசின் ஆணவத்துக்கும் ஆதிக்கத்துக்கும் அண்ணாவின் தமிழ்நாட்டில் #GetOut-தான் எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார் எனவும் கூறியுள்ளார்.


