News January 2, 2026
ஷாருக் கான் துரோகியா? பாஜகவுக்கு காங்., பதிலடி

ஷாருக் கான் குறித்த <<18733111>>பாஜக நிர்வாகியின் <<>> விமர்சனத்திற்கு காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. இந்நிலையில், ஷாருக்கானை விமர்சிப்பதற்கு பதில் வங்கதேச வீரர்களை விளையாட அனுமதிக்கும் BCCI-யை தானே பாஜக கண்டிக்க வேண்டுமென கர்நாடகா காங்., அமைச்சர் பிரியங்க் கார்கே சாடியுள்ளார். மேலும் பஹல்ஹாம் தாக்குதலுக்கு பின் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடியபோது பாஜக ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.
Similar News
News February 19, 2026
OPS-க்கு இப்படியொரு அர்த்தமா?

ஓய்வூதிய திட்டம் தொடர்பாக பேரவையில் EPS எழுப்பிய கேள்விக்கு, OPS பெயரை மறைமுகமாக குறிப்பிட்டு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்துள்ளார். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வந்ததே அதிமுக ஆட்சியில் தான் என்று கூறிய அவர், OPS (ஓ.பன்னீர்செல்வம்) உங்களுக்கு பிடிக்கவில்லை என்பது வேறு; ஆனால், இந்த OPS (Old Pension Scheme) வேறு என்று நகைச்சுவையாக பதிலளித்தார்.
News February 19, 2026
பள்ளிகளுக்கு 11 நாள்கள் விடுமுறை… ஹேப்பி நியூஸ்

வரும் மார்ச்சில் 10, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் தொடங்கிவிடும். மற்ற வகுப்புகளுக்கு ஏப்ரலில் தேர்வுகள் முடிவடையும். இந்நிலையில், மார்ச் மாதத்தில் தெலுங்கு வருடப்பிறப்பு (3-ம் தேதி), ரம்ஜான் (21-ம் தேதி-சனி), மகாவீர் ஜெயந்தி (31-ம் தேதி) என 3 அரசு விடுமுறைகள் வருகிறது. இத்துடன் சனி, ஞாயிறு விடுமுறைகள் 9 நாள்களையும் சேர்த்தால் பள்ளிகளுக்கு மார்ச்சில் 11 நாள்கள் விடுமுறை வருகிறது.
News February 19, 2026
மனித மூளைக்கு உள்ளே இப்படித்தான் இருக்கும்!

ஹார்வர்ட் யூனிவர்சிட்டி மற்றும் கூகுள் நிறுவனம் இணைந்து, AI மூலம் மனித மூளையின் உள்பகுதியை மிக நுணுக்கமாகச் சித்தரிக்கும் 3D போட்டோக்களை வெளியிட்டுள்ளன. வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரின் மூளையில் இருந்து சேகரிக்கப்பட்ட மூளைத்திசு மாதிரிகளை பகுப்பாய்வு செய்து இந்த போட்டோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மூளை பற்றி புரிந்துகொள்ள எதிர்கால ஆராய்ச்சிக்கு இது உதவும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.


