News January 2, 2026

“அரசியலை விட்டு விலகத் தயார்”-அமைச்சர் நமச்சிவாயம்

image

புதுச்சேரி கோரி மேட்டில் உள்ள காவலர் மைதானத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், “போலி மருந்து விவகாரத்தில் எனக்கு தொடர்பு இருந்தால் அரசியலை விட்டு விலகத் தயார். முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு தொடர்பு இருந்தால் அரசியலை விட்டு அவர் விலக தயாரா?.” என சவால் விடுத்தார். அப்போது டிஜிபி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

Similar News

News January 14, 2026

புதுவை: மயங்கி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

image

நெல்லித்தோப்பு, பெரியார் நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சார்லஸ் (45). மதுப்பழக்கமுள்ள சார்லசுக்கு நீரிழிவு நோய் இருந்து‌ள்ளது. இந்நிலையில் திடீரென வீட்டில் மயங்கி விழுந்துள்ளார். உடனே அவரது மனைவி மேரி கணவரை ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசார் தற்போது வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 14, 2026

புதுச்சேரி: மதுக்கடைகள் அடைப்பு

image

உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவரின் நினைவைப் போற்றும் வகையில், ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவள்ளுவர் தினத்தை (ஜன.16) முன்னிட்டு, புதுச்சேரி யூனியன் பிரதேசம் முழுவதும் மதுக்கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. எதிர்வரும் 16.01.2026 (வெள்ளிக்கிழமை) அன்று ஒரு நாள் முழுவதும் மது விற்பனைக்குத் புதுவை அரசு தடை விதிக்கப்பட்டுள்ளது.

News January 14, 2026

நெல்லித்தோப்பு: மயங்கி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

image

புதுவை, நெல்லித்தோப்பு பெரியார்நகரை சேர்ந்த சார்லஸ்(45) கூலி தொழிலாளி மனைவி மேரி. மது பழக்கமுள்ள சார்லசுக்கு நீரிழிவு நோய் இருந்தது‌. இந்நிலையில் திடீரென வீட்டில் மயங்கி விழுந்துள்ளார். உடனே மேரி கணவரை ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!