News May 3, 2024

அரசியல் கட்சிகளுக்கு தோ்தல் ஆணையம் எச்சரிக்கை

image

தங்கள் திட்டங்களால் பயனடைந்த வாக்காளா்களின் தனிப்பட்ட தரவுகளை, அரசியல் கட்சிகள் தேடுவது ஊழலுக்கு சமம் என தோ்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. செயலி, விளம்பரங்கள், கணக்கெடுப்புகள் மூலம் தரவுகளை சேகரித்தால், அதை உடனே நிறுத்திக்கொள்ளுமாறு தேசிய, மாநில கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வாக்காளர்களை குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களிக்கத் தூண்டுவதால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Similar News

News November 16, 2025

வீரநடை போடும் டெம்பா பவுமாவின் படை

image

டெஸ்ட் கிரிக்கெட்டில், டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி வீரநடை போட்டு வருகிறது. அவருடைய கேப்டன்சியில் தென்னாப்பிரிக்கா விளையாடிய 11 போட்டிகளில் ஒன்றில் கூட தோற்கவில்லை. 10 போட்டிகளில் வெற்றி, ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது. ஏற்கெனவே, நடப்பாண்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்ற SA அணி, தங்கள் மீதான Chokers டேக்கையும் உடைத்தெறிந்தது குறிப்பிடத்தக்கது.

News November 16, 2025

விஜய்க்கு ஹிட் அடித்த 10 ரீ-மேக் படங்கள்

image

விஜய் நிறைய ரீ-மேக் படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்த பல ரீ-மேக் படங்கள், பெரிய ஹிட் அடித்திருக்கின்றன. அவை, பெரும்பாலும் மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களின் ரீ-மேக்காக இருந்துள்ளன. அந்த படங்கள் எது என்று தெரியுமா? டாப் 10 ஹிட் படங்களை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், உங்களுக்கு மிகவும் பிடித்த படம் எது?

News November 16, 2025

தோல்விக்கு வீரர்களை சாடிய கவுதம் கம்பீர்

image

டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு திறனுடன் கூடிய மனவலிமை தேவை என்று இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்கா நிர்ணயித்த 124 ரன்கள் இலக்கானது எளிதில் துரத்திப் பிடிக்க கூடியதே என்று அவர் கூறியுள்ளார். சுழலுக்கு சாதகமான இதுபோன்ற ஆடுகளத்தில் விளையாடுவதற்கு உத்தியும், நிதானமும் தேவை எனவும், சரியாக விளையாட தவறினால் தோல்வியே ஏற்படும் என்றும் அவர் பேசியுள்ளார்.

error: Content is protected !!