News January 2, 2026
PM மோடிக்கு ஜெயில் தண்டனை உறுதியானதா? CLARITY

PM மோடி, அமித்ஷாவிற்கு ஐகோர்ட் ஜெயில் தண்டனை வழங்கி இருப்பதாக SM-ல் தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து மத்திய அரசின் தகவல் சரிபார்ப்பகம் (PIB FACT CHECK) விளக்கம் அளித்துள்ளது. அதில், இந்த தகவல் முற்றிலும் தவறானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்குரிய வீடியோ, போட்டோக்களை 87997 11259 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கு அனுப்பி உண்மையை தெரிந்து கொள்ளலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Similar News
News February 8, 2026
தங்கம், வெள்ளி விலை.. ஒரு வாரத்தில் குறைந்தது

கடந்த வாரத்தில் தங்கம், வெள்ளி விலை ஏற்ற இறக்கங்களுடன் பூச்சாண்டி காண்பித்தது. தங்கம் விலை சவரனுக்கு ₹11,400 வரை குறைந்த அதேநேரத்தில் ₹3,840 உயர்ந்தது. அதேபோல், வெள்ளி விலையும் 1 கிலோவுக்கு ₹40,000 வரை குறைந்த நிலையில், ₹5,000 உயர்ந்தது. தற்போதைய நிலவரப்படி, 1 சவரன் தங்கம் ₹1,15,360-க்கும், 1 கிலோ வெள்ளி ₹2.85 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.
News February 8, 2026
லவ் மேரேஜ் பண்றவங்களுக்கு என் வாழ்க்கை ஒரு பாடம்..

பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்யும் அனைவருக்கும் என் வாழ்க்கை ஒரு பாடம். நான் பட்ட பாடு எனக்கு தான் தெரியும் – இவை 2 மகள்களுடன் தற்கொலை செய்த பெண்ணின் கடைசி வரிகள். பல்லாயிரம் கனவுகளுடன் காதல் திருமணம் செய்த பத்மாவை, கணவரின் வேலையில்லா திண்டாட்டமும், கடன் தொல்லையும் இந்த நிலைக்கு தள்ளியுள்ளது. ஆந்திராவின் புத்தூர் பகுதியில் நிகழ்ந்த இச்சம்பவம் பலரையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
News February 8, 2026
பாகிஸ்தானுக்கு பலத்த அடி கொடுத்த அமெரிக்கா

அமெரிக்கா வெளியிட்டுள்ள புதிய வரைபடத்தில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக காட்டப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பாக்., PM ஷெபாஸ் ஷெரீப் & ராணுவ தளபதி அசிம் முனீர் வாஷிங்டனுக்கு பலமுறை சென்று, அமெரிக்காவின் ஆதரவை பெற தீவிரமாக முயற்சி செய்தனர். இந்நிலையில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்திய எல்லைக்குள் சேர்க்கப்பட்டுள்ளது, பாகிஸ்தானுக்கு பலத்த ராஜதந்திர அடியாக கருதப்படுகிறது.


